29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
1558515085 0486
ஆரோக்கிய உணவு

குடும்ப தலைவிகளுக்கான பயன்தரும் கிச்சன் டிப்ஸ்!! இத படிங்க!

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.
வற்றல் குழம்பு வைக்கும்போது சிறிதளவு கடுகு, மஞ்சள்தூள், மிளகாய் வற்றல் போன்றவற்றை வெறும் பாத்திரத்தில் போட்டு வறுத்து அதனை தூளாக்கி குழம்பில் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள துவர்ப்பும் நீங்கி விடும்.

மழைக் காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல் இருக்கும். நெய் கெடாமல் இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத் துண்டை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.

இடியாப்பம் மிச்சமானால் ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம். நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்.

பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.

சப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது. வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும் சப்பாத்தி மென்மையாக வரும்.1558515085 0486

Related posts

சிக் உடலுக்கு ஜி.எம் டயட்!

nathan

healthy tips,, வாழைக்காயை வாரம் மூன்று முறை சாப்பிட்டு வருவதால் ரத்தத்தில் குளுகோஸின் அளவைக் கட்டுபடுத்துகிறது.

nathan

தர்பூசணியை விதையோடு சாப்பிடுபவரா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்

nathan

வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளை போக்கும் சோம்பு !!

nathan

உங்க கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க ‘இந்த’ உணவுகள் போதுமாம்…!தெரிந்துகொள்வோமா?

nathan

காம உணர்வை அதிகரிக்க செய்யும் முருங்கை

nathan

சத்து நிறைந்த முருங்கை கீரை சூப்

nathan

40 வயதை நெருங்கி விட்டீர்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan