30.5 C
Chennai
Friday, May 17, 2024
1558439563 7546
மருத்துவ குறிப்பு

சூப்பர் டிப்ஸ்! நினைவுத் திறனை அதிகரிக்கும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள்…!

நினைவாற்றல் நாளுக்கு நாள் வளர வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து அதிகாலையில் தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும். நினைவாற்றல் வளர வெண்ணையுடன் வில்வ பழத்தின் உட்பகுதி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட மறதி குறைந்து நினைவாற்றல் வளரும்.
இலந்தைப்பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து வைத்துக் கொண்டு அதனுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர மூளை சுறுசுறுப்படைந்து நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

கருஞ்சீரகம் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. பெரியவர்கள் கருஞ்சீரகத்தின் பெருமையை எடுத்து காட்ட சாவைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகதை மருந்தாக பயன்படுத்தலாம். என்று கூறுவர்.

நினைவாற்றல் வளர காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பத்து கருஞ்சீரகத்தை மென்று சாப்பிட வேண்டும். இவ்வாறு தினமும் கருஞ்சீரகத்தை மென்று வந்தால் ஞாபக சக்தி நன்கு வளரும்.
தினமும் காலை ஒரு தேக்கண்டி நாயுருவி வேரின் சாறுடன் ஒரு தேக்கரண்டி கரிசலாங்கன்னி வேரின் சாறை சேர்த்து பருகினால் மூளை நரம்பு பலமடைந்து நினைவாற்றல் பெருகும். வல்லாரைக் கீரையை வாரம் ஒரு முறை கூட்டு வைத்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் வளர்ந்து மறதி குறையும்.

பசலைக் கீரை உடலுக்கு மிகவும் நல்லது. எந்த காலநிலைகளிலும் இது எளிதாக வளரும். கோடி போன்று படரக் கூடிய தன்மை கொண்டது. வாரம் ஒரு முறை பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் அற்புதமாய் வளரும்.

நினைவாற்றல் பெருக பாதாம் பருப்பு, வெண்டைக்காய், தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் நினைவாற்றல் பெருகும்.1558439563 7546

Related posts

குழந்தைக்கு திட்டமிடும் தம்பதிகளின் கவனத்திற்கு

nathan

இந்த அறிகுறிகள் இருந்தால்… அலட்சியம் காட்ட வேண்டாம்..!

nathan

அளவுக்கு மீறினால் நஞ்சு! அதுவே.. அளவாக குடித்தால்?

nathan

அதிகமான தண்ணீர் அருந்துவதால் மலச்சிக்கல் ஏற்படுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

கர்ப்ப காலத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வது குழந்தையை பாதிக்குமா?

nathan

கரையான் அரிக்கும் மரபொருட்கள்: மாற்றுவழி என்ன?

nathan

உண்மையில் எந்த வயதில் ஆண்களின் இனப்பெருக்கம் வீழ்ச்சியடைகிறது?

nathan

காலில் குழிப்புண் இருந்தால் கவலை வேண்டாம்.அப்ப உடனே இத படிங்க…

nathan

மருந்துகள் எவ்வாறு உடல் எடையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது?

nathan