மருத்துவ குறிப்பு

கரையான் அரிக்கும் மரபொருட்கள்: மாற்றுவழி என்ன?

வீடுகளின் இன்டீரியர் அலங்காரங்களுக்கு மர வேலைப்பாடுகள் செய்திருக்கிறோம். கரையான் அரிக்கிறது. தவிர, மழைக்காலங்களில் உப்பிக் கொள்கிறது. இதற்கெல்லாம் மாற்றுவழி என்ன?

இன்டீரியர் டெகரேட்டர் மணிமொழி

உங்கள் பிரச்னைக்கு சரியான தீர்வு பிவிசி வேலைப்பாடுகள். பார்ப்பதற்கு மர வேலைப்பாடு போலவே காட்சியளிக்கும். கரையான் அரிக்காது. மரத்துக்கு அடிப்பது போல அடிக்கடி பெயின்ட் அடிக்க வேண்டிய தேவை இருக்காது. நீண்ட காலம் உழைக்கும். எடை குறைவாக இருக்கும். கையாள்வது சுலபம். மழைக்காலங்களில் உப்பிக் கொள்ளாது. மர வேலைப்பாடு செய்கிற போது மைக்கா போட்டாலும் பிய்ந்து வரும். இதில் அந்தப் பிரச்னையும் இல்லை. பிவிசியில் சுமார் 24 கலர்கள் உள்ளன. உங்கள் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்யலாம்.

கிச்சன் கப்போர்டுகள், பரண்கள், வரவேற்பறை கப்போர்டுகள், டைனிங் டேபிள், ஷூ ரேக், கம்ப்யூட்டர் டேபிள் என மரத்தில் செய்கிற எல்லாவற்றையும் பிவிசியிலும் செய்யலாம்.மர வேலைப்பாடு செய்ய சதுர அடிக்கு 300 ரூபாய்க்கு மேல் செலவாகும். பிவிசியில் சதுர அடிக்கு 200 ரூபாய் செலவழித்தாலே போதும். சமீபத்தில் வந்த வெள்ளப் பெருக்கில் மர வேலைப்பாடு செய்திருந்தவர்களின் பொருட்கள் எல்லாம் நாசமானது. அதுவே பிவிசியில் செய்திருந்தவர்கள் தப்பித்தார்கள்.Fkn1XfR

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button