ஆரோக்கியமாக வாழ்வது என்பது அனைவருக்கும் இருக்கும் ஆசையாகும். இன்று உலகின் மிகப்பெரிய வியாபரங்களில் ஒன்றாக ஆரோக்கியமான வாழ்வை அளிப்பது மாறிவிட்டது, அதற்கான தனிஉணவுகள், தனிஉடற்பயிற்சிகள், பயிற்சி நிறுவனங்கள் என மனித ஆரோக்கியம் மிகப்பெரிய சந்தையாக மாறிவிட்டது.
நமது ஆரோக்கியத்தில் பாதி நமது கைகளில்தான் உள்ளது. உண்மையிலேயே கைகளில்தான் உள்ளது. ஏனெனில் நமது உடலுக்குள் செல்லும் பல பாக்டீரியாக்களும், வைரஸ்களும் கைகள் வழியாகத்தான் உள்ளே செல்கிறது. நமது உடலில் இருக்கும் பாக்டீரியாக்களையே நமது கைகள்தான் உள்ளே கொண்டு செல்கிறது. நமது உடலில் இருக்கும் சில பாகங்களை ஒருபோதும் நாம் வெறும் கைகளால் தொடக்கூடாது. இதன்மூலம் பல நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.
உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…!
காதுமடல்
உங்கள் விரல்கள் மட்டுமே எந்த பொருளையுமே காதுகளுக்குள் விடக்கூடாது. காதுகளுக்குள் எந்தவொரு கடினமான பொருளையும் விடுவது காதின் மெல்லிய சவ்வுகளை கிழிக்கும். இதனால் பல கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக விரலை ஒருபோதும் காதுகளுக்குள் விடக்கூடாது.
உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…!
முகம்
உங்கள் முகத்தை கழுவவதற்கோ அல்லது க்ரீம் தடவுவதற்கோ நீங்கள் உங்கள் கைகளை முகத்தில் வைக்கலாம். ஆனால் மற்ற நேரங்களில் முகத்தில் காய் வைப்பதை தவிர்க்கவும். கிருமிகள் நிறைந்த இடத்தில் கைகளை வைத்துவிட்டு மீண்டும் அதனை முகத்தில் வைக்கும்போது அந்த கிருமிகளால் பல பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் கைகளில் இருக்கும் எண்ணெய் உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்க அதிக வாய்ப்புள்ளது.
உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…!
பின்புறம்
பின்புறத்தை சுத்தம் செய்யும் போது தொடுவது சரி ஆனால் மற்ற நேரங்களில் அங்கு கை வைக்கக்கூடாது. ஏனெனில் இந்த இடத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் உடலுக்கு மிகவும் ஆபத்தானது. இந்த பாக்டீரியாக்கள் உங்கள் உடலுக்கு செல்லும்போது அது குடல் தொடர்பான பல பிரச்சினைகள் உண்டாக்கும். சுத்தம் செய்த பிறகு கைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…!
கண்கள்
உங்கள் கண்கள் மிகவும் உணர்திறன் கொண்டவை. உங்கள் கண்களை தொடுவது கிருமிகளை பட்டும் பரப்பாமல் உங்கள் கண்களுக்குள் பல அழுக்குகளை செலுத்த வாய்ப்புள்ளது. இதனால் கண்ணில் எரிச்சல் மற்றும் கார்னியோக்களில் கீறல்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் கண்களை அவசியமாக தொட வேண்டுமெனில் கண்டிப்பாக உங்கள் கைகளை நன்கு கழுவிவிடுங்கள்.
உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…!
வாய்
பொதுவாக ஒருவரின் வாயில் 34 முதல் 72 ஆபத்தில்லாத பாக்டீரியாக்கள் இருக்கும். இதில் சில பாக்டீரியாக்கள் உங்களுக்கு நன்மையை வழங்குவதாக கூட இருக்கலாம். ஆனால் சில கிருமிகள் நிறைந்த இடங்களில் கைகளை வைத்துவிட்டு வாயில் கைவைக்கும் பொது உள்ளே செல்லும் வெளிப்புற பாக்டீரியாக்கள் உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கக்கூடும். முடிந்தளவு கைகளை உங்கள் வாயில் வைப்பதை தவிர்க்கவும்.
உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…!
மூக்கு
மூக்கை நோண்டும் பழக்கம் அனைவருக்குமே இருக்கிறது. உங்கள் மூக்கிற்குள் அதற்கென சில ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உள்ளது. அந்த இடத்தில் கைகளை வைப்பதன் மூலம் நீங்கள் சில புது பாக்டீரியாக்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். இதனால் உங்களுக்கு பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இது சளி மற்றும் காய்ச்சல் நேரத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.
உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…!
நகங்களுக்கு கீழ்
உங்கள் கைகள் மற்றும் கால் நகங்களுக்கு கீழ் நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு பாக்டீரியாக்கள் இருக்கிறது. நீங்கள் எவ்வளவுதான் கைகளை சுத்தமாகி கழுவினாலும் இந்த பாக்டீரியாக்களை விரட்ட முழுமையாக விரட்ட முடியாது. இதனால்தான் மருத்துவர்கள் கையுறை அணிந்து கொண்டு மருத்துவம் பார்க்கிறார்கள். நகம் கடிப்பது, உடலின் மற்ற பாகங்களில் நகத்தை வைத்து தேய்ப்பது போன்ற பழக்கங்களை அறவே தவிருங்கள்.
உங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா? சத்தியமா நீங்க நினைக்கிற இடம் இல்ல…!
தொப்புள்
உங்கள் உடலில் மிகவும் அழுக்கான பகுதி என்றால் அது தொப்புள்தான். உங்கள் உடலில் பாக்டீரியாக்களை பரப்பும் மையமாக இதுதான் இருக்கிறது. இதனை பெரும்பாலும் நாம் சரியாக கவனிப்பதில்லை அதனால் குளித்த பிறகு கூட இந்த இடம் அழுக்காகத்தான் இருக்கும். இதன் அமைப்பு அதிக பாக்டீரியாக்களை ஈர்க்கும் ஒன்றாக இருக்கிறது. உங்கள் கைகளால் இதனை தொட்டுவிட்டு மற்ற இடங்களை தொடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்பட காரணமாக அமையும்.
source: boldsky.com