30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

விரைவாக கருத்தரிக்க 7 விஷயங்கள்

திருமணம் ஆனவுடன் கருத்தரிக்க விரும்புவோரை விட, ஒருசில மாதங்கள் கழித்து கருத்தரிக்க விரும்புவோர் தான் அதிகம். இதற்கு, புரிதல், நாட்களை ரசிப்பது, கொஞ்சம் நாள் இல்லறத்தில் இனிமை காண்பது என பல காரணங்கள் இருக்கின்றன. நீங்கள் சீக்கிரம் கருத்தரிக்க விரும்புகிறீர்கள் எனில் இந்த ஏழு நடவடிக்கைகள் முறையை பின்பற்றுங்கள்.

* நீங்கள் கருத்தரிக்க விரும்புகிறீர்கள் எனில், ஓரிரு மாதங்களுக்கு முன்னதாகவே கருத்தடை மாத்திரை மற்றும் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில், கருத்தடை மாத்திரைகளின் தாக்கம் ஓரிரு மாதங்கள் வரை கூட தொடரலாம் என்று கூறப்படுகிறது.

* மாதவிடாய் சுழற்சியில் 10 – 20 ஆம் நாள் இடைவேளையில் பொதுவாக கரு நல்ல திறனுடன் இருக்குமாம். எனவே இந்நாட்களில் உடலுறவில் ஈடுபடுவது கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

* சிலர் உடலுறவில் ஈடுபட்டவுடனே அவர்களது பெண்ணுறுப்பை சுத்தம் செய்து விடுவார்கள். இது தவறான அணுகுமுறை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் தான். ஆனால், உடனே வேண்டாம் என்கிறார்கள். உடலுறவில் ஈடுபட்டு சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்தால் போதுமானது.

* ஆண்களுக்கு அதிகாலையில் தான் விந்து எண்ணிக்கை அதிகமாகவும், நல்ல திறனுடம் இருக்கிறதாம். எனவே, அதிகாலையில் உடலுறவில் ஈடுபடுவதால் கருத்தரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

* உடலுறவில் ஈடுபட நிறைய நிலைகள் (Position) இருக்கின்றன. ஆனால், சாதாரண நிலையில் ஈடுபடுவது தான் விந்து நல்ல வேகத்தில் உட்செல்ல உதவுவதாக கூறுகிறார்கள்.

* கருத்தரிக்க வேண்டும் என்று விரும்புவோர் ஓர் நாள் மட்டும் உடலுறவில் ஈடுபடுவது போதாது. ஓரிரு நாட்கள் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டால் தான் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

* இவ்வாறு எல்லாம் செய்தாலும் கூட ஒரே மாதத்தில் கருத்தரிப்பது நடக்காமல் போகலாம், நெகட்டிவ் ரிசல்ட் வரலாம். இது சாதாரணம் தான். எனவே, மீண்டும் முயற்சி செய்யுங்கள், இதில் எந்த தவறும் இல்லை, இது இயற்கையானது தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

Related posts

22-27 வயது ஆணா நீங்கள்?… உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டுமா?

nathan

உஷார்… உங்களுக்கும் இப்படி நடக்கலாம்.! நாட்டு கோழி முட்டையை நம்பாதிங்க..!

nathan

ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்

nathan

உங்க உடம்பு நல்லா இருக்கனும்னா இதெல்லா கண்ண மூடிட்டு தூர தூக்கி எரிஞ்சிடுங்க!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு நீண்ட ஆயுள் இருக்கான்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க! படிங்க இத…

nathan

உங்களுக்கு தெரியுமா அடிக்கடி தலைக்கு குளிப்பது நல்லதா?

nathan

அதிர்ச்சி மேட்டர்..! மது அருந்துபவர்களுக்கு உங்களுக்கு இந்த இடத்தில் லேசான வீக்கம் இருக்கா உடனே பாருங்க ..!

nathan