w8
ஆரோக்கியம்

உங்க ஃபேவரட் ஹீரோயினோட வெயிட் குறைக்கிற சீக்ரட் தெரிஞ்சிக்கணுமா?

சரியான உடலமைப்பு என்றதும் நமது நினைவுக்கு வருபவர்கள் சினிமா நடிகைகள். குறிப்பாக பாலிவுட் நடிகைகள். ஒல்லியான, வளைவு நெளிவுடன் கூடிய பிட்டான உடலமைப்பைக் கொண்டவர்கள் பாலிவுட் நடிகைகள். முன்னிலையில் இருக்கும் பாலிவுட் நடிகைகள் எடை இழப்பிற்கான ரகசியம் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

கர்ப்ப காலம் முதல் கர்ப்பத்திற்கு பின்னும் தங்கள் எடையை அவர்கள் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பது பற்றியும் நாம் அறிந்துக் கொள்ள இந்த பதிவை தொடர்ந்து நீங்கள் படிக்கலாம்.

w8

யோகா என்னும் மந்திரம்

கரீனா கபூர், தீபிகா படுகோன், ஷில்பா ஷெட்டி போன்ற பெரும்பாலான முன்னிலை பாலிவுட் நடிகைகள் யோகாவைப் பின்பற்றுபவர்கள். மிகப் பெரிய யோகா பயிற்சியாளரான கரீனா கபூர் தினமும் நூறு முறை சூரிய நமஸ்காரம் செய்வதாக கூறப்படுகிறது. இந்த பழம் பெரும் இந்திய உடற்பயிற்சி மற்றும் தியான சூட்சமம் சீரான உடல் நிலையை பராமரிக்க உதவுவதுடன் கவனம் மற்றும் மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

சில வகை யோகா நிலைகள், கட்டுக்கோப்பான உடல், எடை இழப்பு, செரிமானம் (குடலின் நோயெதிர்ப்பு சக்தி) மற்றும் நெகிழ்வுத்தன்மை போன்றவற்றிற்கு நன்மை அளிக்க உதவுகின்றன. இதன் காரணமகவே, சில புகழ் பெற்ற பிரபலங்களான மல்லிகா அரோரா, லாரா தத்தா போன்றவர்கள் யோகாவை தீவிரமாக பரிந்துரைக்கின்றனர்.

இளநீர் மகத்துவம்

இளநீர் அல்லது தேங்காய் நீர் பல்வேறு வைட்டமின் மற்றும் மினரல்கள் கொண்டது. தேங்காய் நீரில் கலோரிகள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனை தினமும் பருகுவதால் விரைவான எடை இழப்பு சாத்தியமாகிறது என்பதால் பிரபலங்கள் விரும்பி அருந்தும் ஒரு பானமாக இருந்து வருகிறது. தேங்காய் நீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியமாவது மட்டுமில்லாமல் அழகான சருமம் மற்றும் கூந்தலும் அழகாக மாறுகிறது.

சோனம் கபூர் மற்றும் கரீனா கபூர் தங்களுடைய ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும் இளநீர் அருந்துவதாகத் தெரிவிக்கின்றனர். தீபிகா படுகோன், இளநீரை ஒரு மாயாஜாலம் கொண்ட பானம் என்று கூறுகிறார். இளநீர், உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, புதிய ஆற்றல் மிக்க அணுக்கள் உற்பத்திக்கு உதவுவதாக அறியப்படுகிறது.

கார்டியோ பயிற்சி

உடலின் கட்டுக்கோப்பு அளவைப் பராமரிக்க ஒவ்வொரு பாலிவுட் நடிகையும் கார்டியோ பயிற்சி செய்கின்றனர். கார்டியோ பயிற்சி செய்வதால் உடலின் கொழுப்பு அளவு மிக அதிகமாகக் கரைகிறது. மேலும் தொடர்ந்து கார்டியோ பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்வதால், தசைகள் வலிமைப் பெறுகின்றன.

உடலின் சக்தி அதிகரிக்கிறது. ஒவ்வொரு நடிகையின் டயட், வேலை அட்டவணை போன்றவற்றை சார்ந்து, அவர்களின் கார்டியோ பயிற்சி நேரமும் மாறுபடுகிறது. பிரியங்கா சோப்ரா, ஜாக்லின் பெர்னாண்டஸ் போன்றோர் தங்கள் பிட்னஸ் திட்டத்தில் கார்டியோவை இணைத்துக் கொண்டுள்ளனர்.

பைலேட்ஸ்

யோகாவில் இருந்து கவரப்பட்ட ஒரு புது வகை பயிற்சி இது. பைலேட்ஸ் என்பது அங்க நிலைகள் மற்றும் நீட்சி போன்றவற்றில் யோகாவைப் போல் ஒரே விதமாக இருந்தாலும், பைலேட் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கொண்டு அதாவது ஒரு பெரிய வட்ட வடிவ ரிங், சிறிய பந்து, மென்மையான உருளை போன்றவற்றைப் பயன்படுத்தி பயிற்சிகள் செய்வர். இது போல் சில பொருட்களைக் கொண்டு பயிற்சி மேற்கொள்வது ஒரு சுவாரஸ்யமான மற்றும் இன்பமான அனுபவமாக இருக்கும்.

சோனம் கபூர் ஒரு பைலேட்ஸ் விசிறி ஆவார். அவர் தினமும் மாலை வேளையில் 45 நிமிடங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சுஷ்மிதா சென் மற்றும் மல்லிகா அரோராவும் அவ்வப்போது தங்கள் மேற்கொள்ளும் பைலேட் பயிற்சி விடியோக்களை தங்களது சமூக ஊடக கணக்குகளில் பதிவேற்றம் செய்வதை பார்த்திருக்கலாம்.

விளையாட்டு, எடை இழப்பு

வழக்கமான உடற்பயிற்சி வகைகளில் இருந்து சற்று மாறுபட்டு மகிழ்ச்சியான வழியில் உடற் பயிற்சி செய்வதை சில பாலிவுட் பிரபலங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அவ்வபோது சில விளையாட்டு பயிற்சிகளிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். ஒவ்வொரு பிரபலமும் ஒரு குறிப்பிட்ட அல்லது சில வகை விளையாட்டு பயிற்சிகளில் ஆர்வமாக இருப்பார்கள். எடை இழப்பு என்ற ஒன்றைத் தாண்டி அவர்களுடைய தனிப்பட்ட விருப்பத்தினால் இந்த ஈடுபாடு தோன்றுகிறது. சோனம் கபூர் நீச்சல் பயிற்சியை அதிகம் விரும்புவார்.

சோனாக்ஷி சின்ஹா சைக்கிள் பயிற்சி மற்றும் டென்னிஸ் விளையாட்டை அதிகம் விரும்புகிறார். கால் தசைகளை கட்டுகோப்பாக வைத்துக் கொள்ள கத்ரினா கைப் வாரம் இருமுறை சைக்கிள் பயிற்சி செய்கிறார். தீபிகா படுகோன் தனக்கு உடற்பயிற்சி மீது விருப்பமில்லை என்றும் ஆனால் பேட்மிடன் ஆடுவது தனது விருப்பம் என்றும் ஒருமுறை கூறி இருக்கிறார்.

ஜிம் செல்வது

பாலிவுட்டில் பிரபலமாக இருக்கும் எல்லா நடிகைகளும் தினமும் ஜிம் செல்பவராக உள்ளனர். இதில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தனது வீட்டிலேயே ஜிம் வைத்திருக்கிறார். பாலிவுட் பிரபலங்கள் பலர் தங்களுக்கான தனிப்பட்ட ஜிம் பயிற்சியாளர்களை தங்களுடன் வைத்துக் கொள்கின்றனர். அந்த பயிற்சியாளர்கள், இவர்களுக்குத் தேவையான தக்க பயிற்சிகளை அவ்வப்போது பயிற்றுவிப்பதும் அதற்கேற்ற உணவு அட்டவணை , வேலை அட்டவணை, பிட்னஸ் தேவை போன்றவற்றை அவர்களுக்கு அறிவுறுத்தவும் செய்கின்றனர்.

“ஈட் ரைட் டயட்”

எடை நிர்வாகம் அல்லது எடை இழப்பு ஆகிய இரண்டிலும் முக்கியமான மற்றும் அடிப்படை விதி சரியான உணவை சாப்பிடுவது. பாலிவுட் நடிகைகள் தங்களால் முடிந்த அளவு உடற்பயிற்சி செய்கின்றனர். அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவு அட்டவணையையும் பின்பற்றி வருகின்றனர். அலியா பட், வித்யா பாலன் போன்ற பிரபலங்கள், ஜங்க் உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று நம்புகின்றனர். மற்றும் அவர்களின் உணவு அட்டவணைக்கு ஏற்ப, வீட்டில் தயாரிக்கபட்ட உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விரும்புகின்றனர்.

பெரும்பாலும் எல்லா பிரபலங்களும் காய்கறிகள், ஆரோக்கியமான சாலட், பருவ நிலைகேற்ற பழங்கள் போன்றவற்றை தங்கள் உணவில் இணைத்துக் கொள்கின்றனர். ஆட்டிறைச்சி மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை குறிப்பிட்ட அளவு எடுத்துக் கொள்கின்றனர். பிரபலங்கள் எப்போதும், குறைந்த கார்போ-உயர் புரத உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர். பிபாஷா பாசு தன்னுடைய உடலின் புரத தேவைக்காக அதிக மீன் உணவை எடுத்துக் கொள்கிறார். சோனம் கபூர் தன்னுடைய புரத தேவைக்காக முட்டையை அதிகம் சேர்த்துக் கொள்கிறார்.

Related posts

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

nathan

பெண்களின் உடல் வலுவை அதிகப்படுத்த இதை செய்யங்கள்!…

sangika

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan

வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால் இத்தனை நன்மைகளாம்!…

sangika

வறட்டு இருமலை போக்கும் கைமருந்து..!!

nathan

வலுவாக்கும் சுவிஸ் பால் பயிற்சிகள்!..

nathan

இன்றே மேற்கொள்ளுங்கள்.!! குழந்தையின்மை பிரச்சனைக்கு பாட்டி வைத்தியம்

nathan

குறட்டையினால் ஏற்படும் விளைவுகள்!….

sangika

நீங்கள் இதிக உப்பு பாவனையாளரா? அப்போ கட்டாயம் இத படிங்க!

sangika