1 1538817766
ஆரோக்கியம் குறிப்புகள்

முயன்று பாருங்கள் பானங்களில் ஒன்றை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க…

நீங்கள் இரவில் தூங்கும்போது, ​​உங்கள் உடலுக்குத் தேவையான திரவங்கள் வழங்கப்படுவதில்லை. எனவே காலையில் எழுந்தவுடன், ஆரோக்கியமான பானங்களால் உங்கள் உடலுக்குத் தேவையான திரவங்களை வழங்குவது அவசியம். ஆனால் அவை காபி அல்லது தேநீர் அல்ல!

காலையில் குடிக்க வேண்டியது
முதல் முக்கிய காலை பழக்கம், எழுந்தவுடன் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆரோக்கியமான பானங்களையும் உங்கள் தினசரி காலையில் இணைத்துக் கொள்ளலாம், அது உங்கள் நேரத்தை அதிகம் உட்கொள்வதில்லை. காலையில் நீங்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கிய பானங்களின் ஒரு பட்டியல் இங்கே,
2 1538817775

ஜீரா நீர்
ஜீரா அல்லது சீரக விதைகள் செரிமானத்தை விரைவுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன.இது செரிமான நொதிகளின் சுரப்பைத் தூண்டுவதற்கும், செரிமான செயல்பாடுகளை விரைவுபடுத்துவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. ஜீரா நீர் ஒரு பெரிய எனர்ஜி பூஸ்டர். எனவே காலையில் உங்கள் எனர்ஜியை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் மந்தத்தை நீக்குகிறது. எப்படிச் செய்வது: ஒரு கப் தண்ணீருக்கு 1 டீஸ்பூன் ஜீரா சேர்த்து கொதிக்க வைக்கவும். அதை வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
3 1538817781.jpg

ஓம நீர்
அஜ்வெய்ன்(ஓமம்) அல்லது கரோம் விதைகள் இரைப்பைக் குடல் வலி நீக்கும் பண்புள்ள தைமாலைக் கொண்டுள்ளன. இந்த தைமால் செரிமானத்தை மேம்படுத்துகின்ற அத்தியாவசிய எண்ணெய், அமிலத்தன்மை நீக்கம் மற்றும் எடை இழப்புகளை ஊக்குவிக்கிறது. கரோம் விதைகளில் இருக்கும் தைமோல் வயிற்றில் இரைப்பைச் சாறுகளை சுரக்க வைக்கிறது, இதனால் செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது. எப்படி செய்வது: அரை டீஸ்பூன் அஜ்வெய்ன் விதைகளை 1 கப் தண்ணீரில் கலந்து, கொதிக்க வைக்கவும். அது குளிர்ச்சியடைந்தவுடன், வடிகட்டி குடிக்கலாம்.
4 1538817790

இன்பியூஸ்ட் நீர் ;
நீங்கள் வெற்று நீரைக் குடிக்க சலித்துப்போகும் போதெல்லாம், ஏன் மூலிகைகள், ஆப்பிள் சைடர் வினிகர், வெள்ளரிக்காய் அல்லது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு போன்ற பழங்களை தண்ணீரின் சுவையை அதிகரிக்க அதனுடன் சேர்க்க முயற்சி செய்யக்கூடாது? எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு நோயெதிர்ப்பு அதிகரிக்கும் வைட்டமின் சி- யைக் கொண்டுள்ளன. ஆப்பிள் சீடர் வினிகர் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் எடை இழப்பை ஊக்குவிக்கிறது. வெள்ளரிக்காய் உங்கள் உடலில் நீரேற்றத்திற்கு உதவுகிறது மற்றும் நச்சுகளை வெளியேற்றுகிறது, மற்றும் துளசி அல்லது புதினா போன்ற மூலிகைகள் ஆன்டி பயோடிக், ஆன்டி – பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன. எப்படிச் செய்ய வேண்டும்: ஒரு ஜக்கில் தண்ணீரை ஊற்றி, மேலே உள்ள பொருட்களில் ஒன்றினை அதனுள் சேர்க்கவும். சுவையூட்டுவதற்காக 2 முதல் 4 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். காலையில் உங்கள் நேரத்தை காப்பாற்றிக் கொள்ள, மேலுள்ள கலவையை இரவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து,காலையில் தண்ணீரில் இருந்து மூலப்பொருளை நீக்கி குடிக்க வேண்டும்.
8 1538817893

அலோவேரா (கற்றாழை) ஜூஸ்)
அலோவேரா சாறு, இரைப்பை அழற்சி நோய்க்குறியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை பயக்கும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது மற்றும் எரிச்சல் கொண்ட குடல் நோய்க் குறிக்கும் உதவுகிறது. இது செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு ஆகியவற்றைச் சமாளிக்க உதவுகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது. எப்படி செய்ய வேண்டும்: கற்றாழையை கிழித்து அதிலிருந்து வெள்ளை ஜெல்லை பிரித்தெடுக்கவும். 2 தேக்கரண்டி கற்றாழை ஜெல்லை எடுத்து ப்ளண்டரில் போடவும்.அதில் 3 கப் தண்ணீரைச் சேர்த்துக் கலக்கவும்.

Related posts

இந்த 6 ராசி பெண்கள் மோசமான மனைவிகளாக இருப்பாங்களாம்…

nathan

இந்த 5 ராசி பெண்கள் அவங்க கணவரை அடிமை மாதிரி நடத்துவாங்களாம்… ஆண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் இளநீரைக் குடிக்கலாமா? கூடாதா?

nathan

gas trouble symptoms in tamil – வாயு பிரச்சனை

nathan

இலவங்கப்பட்டை பற்சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு

nathan

சிறந்த திருமண பொருத்தம்

nathan

moringa in tamil: அதிசய மரம் மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகள்

nathan

இது தான் வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்காதே என்று சொல்வாங்களா?

nathan

பற்களைத் துலக்கும் போது நம்மை அறியாமல் நாம் செய்யும் 8 தவறுகள்!

nathan