29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
அழகு குறிப்புகள்ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா பெண்களின் கருமுட்டை வலி எதனால் ஏற்படுகிறது?.! சரியாக என்ன செய்வது?.!!

இன்றுள்ள சில பெண்களுக்கு பெண்களின் சினைப்பையில் இருந்து கருமுட்டையானது வெளியேறும் தருணத்தில்., வயிற்றின் ஒரு பகுதியில் வலியானது ஏற்படும். மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில்., இந்த வலி ஏற்படுவதால் ஜெர்மன் மொழியில் மிட்டல்ஸ்மெர்ஸ் (நடு வலி) என்றும் கூறுவார்கள். இயல்பாக பெண்ணிற்கு மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் இருக்கும் நிலையில்., 14 ஆவது நாட்களில் இவ்வலி ஏற்படும். அனைத்து பெண்களுக்கும் இவ்வலி கட்டாயம் ஒரு நாளில் உணரப்பட்டு இருக்கும்.

இதுமட்டுமல்லாது சுமார் 20 விழுக்காடு அளவுள்ள பெண்களுக்கு கருமுட்டை வலி பிரச்சனை., எல்லா மாதத்திலும் இருக்கும். இதுவும் மாதவிடாயுடைய நிகழ்வுதான். இந்த வலிக்கான துல்லிய காரணங்கள் இன்னும் கண்டறியப்படாத நிலையில்., சினைப்பையில் சுவரினை துளைத்து முட்டை வெளியேறும் சமயத்தில்., வெளியாகும் திரவம் அல்லது இரத்தம்., அருகில் இருக்கும் நரம்புகளில் ஏற்படும் எரிச்சலால் இவ்வலி ஏற்படுவதாக கூறப்படுகிறது.

மேலும்., முட்டை வெளியேறிய பின்னர் இவ்வலியானது குறைந்துவிடும். இந்த வலியானது சில நிமிடங்கள் முதல் ஓரிரு நாட்கள் வரை கூட இருக்கும். கருமுட்டை வலியானது வயிற்றின் வலது மற்றும் இடது சினைப்பையில் எந்த சினைப்பை கருமுட்டையை வெளியேற்றுகிறதோ? அதற்கேற்ப ஒரு பக்கத்தில் ஏற்படும். இவ்வாறாக வயிற்று வலி மாதவிடாய் நிகழ்ந்த 14 நாட்களில் ஏற்படும் பட்சத்தில்., இதனை கருமுட்டை வலியாக கருதலாம்.

இயல்பை விட குறைவான மற்றும் நீண்ட மாதவிடாய் சுழற்சியை கொண்ட பெண்களுக்கு., மாதவிடாய் துவங்குவதற்கு 14 நாட்கள் முன்னதாக வலி ஏற்படும். இந்த பிரச்சனை குறித்து மருத்துவரிடம் ஆலோசிக்கும் பட்சத்தில்., மாதவிடாய் சுழற்சி அட்டவணையை குறித்து கண்காணிக்குமாறு கூறுவார். இந்த அட்டவணையில் எந்த நாளில்? எந்த இடத்தில்? வலி ஏற்படுகிறது என்பதை குறைத்துக்கொள்ள வேண்டும்.

சாதாரணமான உடல் பரிசோதனை சமயத்தில்., கடுமையான வலி அல்லது பிற பிரச்சனைகள் இருப்பதாக தெரியவந்தால்., வலிக்கான காரணத்தை கண்டறிய சோதனைகள் கூட மருத்துவரால் பரிசோதனை செய்யப்படலாம். இந்த வலி சாதாரணமான ஒன்றுதான். இதனால் எந்த விதமான தீங்கும் ஏற்படாது. இந்த வலியானது அதிகமாக இருக்கும் பட்சத்தில்., மருத்துவரை சந்தித்து தேவையான ஆலோசனை பெற்று கொள்ள வேண்டும்.

Related posts

சூப்பர் டிப்ஸ்.. இயற்கை முறையிலான சில எளிய அழகு குறிப்புகள்!!

nathan

பிக்பாஸ் ஷிவானியின் அட்டகசமான பொங்கல் புகைப்படங்கள்!

nathan

உங்க பொன்னான கைகள்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளை தூங்க வைக்கும் வழிகள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் செய்யும் தவறுகள்

nathan

very early signs of pregnancy 1 week in tamil – கர்ப்பத்தின் மிக ஆரம்ப அறிகுறிகள்

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

ஆய்வில் தகவல்! வெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் 50% இரத்த சர்க்கரை அளவு குறையுமாம்..

nathan

ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

nathan