​பொதுவானவை

காட்டன் புடவைக்கு கஞ்சி போட தெரியுமா?

 

காட்டன் புடவைக்கு கஞ்சி போட தெரியுமா?

காட்டன் புடவைகளை விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. அழகாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த புடவை கட்டிய பெண்களை பார்க்கவே சூப்பராக இருக்கும். இந்த வெயில் காலத்திற்கு காட்டன் புடவைகளே ஏற்றது.

நாமே வீட்டில் கஞ்சி போட்டு, அழகாக உடுத்தும்போது , எல்லோரையும்  புதுப்புடவையா என்று கேட்க தூண்டும். சரி இப்போது காட்டன் புடவைக்கு எப்படி கஞ்சி போடலாம் என்று பார்க்கலாம்..

மைதா மாவு அல்லது ஜவ்வரிசி மாவிலேயே கஞ்சி தயார் செய்யலாம். இதற்காக விலை உயர்ந்த ஸ்டார்ச் பவுடர் வாங்க வேண்டாம். 1 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி அல்லது மைதா மாவினை நீரில் கரைத்து, கொதிக்க விடவும்.

நன்கு கொதித்ததும் இறக்கவும். அதை கட்டிகள் இல்லாமல் வடிகட்டவும். நன்கு உலர்ந்த புடவையை மட்டுமே கஞ்சியில் நனைக்க வேண்டும். மிகவும் இறுக்கமாக கசக்கி பிழியக் கூடாது. டார்க் கலர் புடவைக்கு கொஞ்சம் சொட்டு நீலம் கூட கஞ்சியில் சேர்க்கலாம்.

கஞ்சியில் நனைத்த பின், நன்றாக புடவையை உதரி, மடிப்புகளின்றி வெயிலில் உலர்த்த வேண்டும். உங்களுக்கு பிடித்த  வாசனை திரவியத்தை (perfumes) கஞ்சியில் சில சொட்டு விடும் போது கஞ்சியின் அழுக்கு வாடை அடிக்காமல் நல்ல நறுமணத்துடன் இருக்கும். காய்ந்ததும் நன்கு நீவி அயர்ன் செய்யவும்.

Related posts

ஓட்ஸ் கீர்

nathan

tamil name | தமிழ் பெயர்

nathan

பச்சை பயறு மிளகு மசாலா

nathan

மாங்காய் தொக்கு செய்வது எப்படி

nathan

ருசியான வீட்டு நெய் செய்வது எப்படி?

nathan

விவாகரத்தை தடுப்பதற்கான சில வழிமுறைகள்

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

nathan

உங்கள் இல்லறம் நல்லறமாக இதை படிங்க

nathan

கம்பு வெஜிடபிள் கஞ்சி

nathan