காய்கறிகளை, இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது, ஏன் தெரியுமா?
இயற்கைன உயிர்ச் சத்துக்கள் யாவும் காய்கறிகளில் நிறைந்துள்ளன• இவற்றை யாரும் மறுக்கவோ மறக்கவோ முடியாது.
ஆனால் அந்த காய்கறிகளை எப்போது சமைத்து சாப்பிடக் கூடாது என்பதை அறிந்து கொண்டு தவிர்த்திட வேண்டும்.
காரணம், இரவு நேரத்தில் காய்கறி சேர்த்துச் சமைத்த உணவை நீங்கள் சாப்பிடும் போது அதில் உள்ள அதிகளவு நார்ச் சத்துக்கள் உங்கள் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாக நகரும்.
அப்படி மெதுவாக நகர்வதால், அஜீரண கோளாறுகள் ஏற் படும். இதன் காரணமாக தூக்கம் கெடும், தூக்கம் கெட்டு விடுவதால், அடுத்த நாள் முழுவதும் ஒருவித மன அழுத்தம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு, வேலைகள் அத்தனை யிலும் கவனச் சிதறல் உண்டாகும்.