பொது மருத்துவம்:தக்காளியை காய் வகையாக பயன்படுத்தினாலும், இதனை தாவரியல்படி பழமாகவே உறுதி செய்துள்ளனர். இந்த பழம் சூற்பையில் இருந்து உருவாவதுடன், அதன் விதைகள் பூவில் உள்ள விதைகளில் இருந்து பெறப்படுகிறது.
இதன் வேர்கள் தென்மேற்கு அமெரிக்க நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டாலும், மெக்சிக்கொ நாடுகளில் தான் முதலில் பயிரிடப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் இது பரவிக் காணப்படுகிறது.
தக்காளியில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:
இதில் 95% நீரினால் ஆனது. மற்றும் 5% மாச்சத்துக்களும், 1 % புரதமும், 80% நார்ப் பொருட்களும் காணப்படுகின்றது. மேலும் இதில் அதிகளவான விட்டமின், கனியுப்புக்கள் காணப்படுகின்றது.
தக்காளியை ஏன் பிடித்த உணவாக எலோரும் விரும்பி உண்கிறார்கள்?
1. புற்று நோய்க்கு எதிராகச் செயற்படும்.
தக்காளியில் உள்ள லைகோபன் புற்றுநோய் கலங்களை வளர விடாமல் தடுக்கின்றது. இதில் உள்ள அண்டிஒக்ஸிடன் புற்றுநோயால் மேலும் பாதிப்புக்கள் ஏற்படாமல் தடுக்கும்.
2. கொழுப்பைக் குறைத்து, இதயத்தை பாதுகாக்கும்.
தக்காளியில் உள்ல விதைகளில் கொழுப்புகள் இருப்பதில்லை நார்ப் பொருட்களே காணப்படுவதனால் கொழுப்பைக் குறைக்கின்றது. மேலும் இதில் காணப்படும் பொட்டாசியம் மேலும் பல இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
3. இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
தக்காளியில் உள்ள லைகோபன், குளோர்ஜினிக் அமிலம் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
4. அழற்சி நிலைக்கு எதிராகச் செயற்படும்.
நோய்களை ஏற்படுத்தும் காரணிகளால் ஏற்படும் அழற்சி நிலையை குணப்படுத்த தக்காளியில் உள்ள லைகோபன், பீட்டா கரோட்டின் உதவுகின்றது.
5. இரத்தம் உறைவதை தடுக்கும்.
இரத்தம் உறிவதனால் பல் இதயநோய்கள் ஏற்படுகின்றது. தக்காளியில் உள்ள திரவ பகுதியானா புரூட்லோ மற்றும் லைகோபன் சேர்வதனால் இரத்தம் உறைவதை தடுக்க முடியும்.
6. சமிபாட்டைத் தூண்டும்.
இதில் காணப்படும் நார்ப் பொருட்கள் சமிபாட்டு தொகுதியில் உள்ல தசைகளின் அசைவுகளை சீராக்குவதுடன், சமிபாட்டிற்குத் தேவையான அமிலத்தை அதிகமாக சுரக்கச் செய்கின்றது. மேலும் குடல் பகுதிகளில் கழிவுகள் வெளியேற உதவும். எனவே சமிபாட்டுத் தொகுதியின் ஆரோக்கியம் பேணப்படும்.
7. சரும பராமரிப்பிற்கு உதவும்.
தக்காளியை சருமத்தில் பூசுவதனால் அதன் ஆரோகியம் பேணப்படும். இதனை ஸ்கிறப்பாக பயன்படுத்தி இறந்த கலங்களை நீக்க முடியும். மேலும் சூரியக் கதிர்களால் ஏற்படும் பாதிப்புக்களில் இருந்து தீர்வைப் பெற்றுத் தரும்.
8. முடியின் பராமரிப்பிற்கு உதவும்.
தலைக்கடி, பொடுகு, எக்ஸிமா போன்ற தலையில் ஏற்படும் பிரச்சினைகளிற்கு தக்காளியில் உள்ள விட்டமின் சி உதவுகின்றது.
3-4 மேசைக்கரண்டி எலுமிச்சை சாற்றுடன் 3 தக்காளி சேர்த்து தலைக்கு பூசுவதனால் தலை முடியின் ஆரோக்கியத்தை பேண முடியும்.
9. கண் பார்வையை மேம்படுத்தும்.
தக்காளியில் உள்ள பீட்டா கரோட்டினால் கிடைக்கும் விட்டமின் ஏ, அண்டிஒக்ஸிடனால் கண் பார்வை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும்.
10. ஈரப்பதத்தை உணவில் பேணும்.
தக்காளியில் 95 % நீர்ச்சத்து காணப்படுவதுடன் 18-22 கலோரிகள் உள்ளன. இதனை சாப்பிடுவதனால் பசியை தூண்டாமல் தடுக்கும். அத்துடன் தேவையான நீர்ச்சத்தும் உடலிற்கு கிடைக்கின்றது.