36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சுவையாக இருக்கும் கீரை குழம்பு

வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வருவது மிகவும் நல்லது. பலருக்கு கீரையைக் கொண்டு வெறும் பொரியல் மட்டும் தான் செய்யத் தெரியும். ஆனால் அந்த கீரையைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடலாம் என்பது தெரியுமா? ஆம், கீரை குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். மேலும் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும்.

இங்கு கீரை குழம்பை எப்படி செய்வதென்று எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து மகிழுங்கள்.

Keerai Kuzhambu Recipe
தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை/புளிக்கீரை – 5 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

தேங்காய் – 1 கப்
சின்ன வெங்காயம் – 3
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
புளி – 1 சிறிய எலுமிச்சை அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வடகம் – 2 துண்டு

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவி போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு வாணலியில் சுத்தம் செய்த கீரையை போட்டு, தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள பருப்பு, அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இறுதியல் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள வடகத்தை சேர்த்து தாளித்து, அதனை குழம்புடன் சேர்த்து கிளறினால், கீரை குழம்பு ரெடி!!!

Related posts

உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்!!!

nathan

இயற்கை பொருட்களை வைத்து அழகை பேண இதை செய்யுங்கள்….

sangika

தெரிஞ்சிக்கங்க…இந்த பிரச்சினை உள்ளவர்கள் நெல்லிக்காயை தெரியாமகூட சாப்பிடாதீங்க…

nathan

காலை உணவில் அடிக்கடி உப்புமா சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சர்க்கரை நோயாளிகளை பாதுகாக்கும் பீனட் பட்டர்..

nathan

எதிர்ப்பு சக்தி நிறைந்த முந்திரிபழம்!

nathan

ghee benefits in tamil – நெய் உண்ணுவதின் நன்மைகள்

nathan

கண்ணின் ஆரோக்கியத்திற்கு உதவும் பப்பாளி…!அப்ப இத படிங்க!

nathan

சூப்பரான கருப்பு உளுந்து கஞ்சி

nathan