தேவையான பொருட்கள் :
பெரிதாக வெட்டிய மட்டன் – 500 கிலோ,
வெங்காயம் – 4
கரம் மசாலா – 2 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் – 7,
இஞ்சி பூண்டு விழுது – 3 டீஸ்பூன்,
வெண்ணெய் எண்ணெய் – தேவையான அளவு,
சீரக சம்பா அரிசி – அரை கிலோ,
கொத்தமல்லி, புதினா, உப்பு – சிறிதளவு.
செய்முறை :
மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த மட்டன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கரம் மசாலா சிறிதளவு, பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு விழுது சிறிது, வெண்ணெய், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு மட்டன் முக்கால் பாகம் வெந்தவுடன் தனியாக எடுத்து எண்ணெயில் போட்டு வறுத்து கொள்ளவும்.
ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் சீரக சம்பா அரிசி, கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
சாதம் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் வறுத்த மட்டன் துண்டுகளை சேர்த்து மூடி போட்டு மேலும் சிறிது நேரம் வேக விட்டு பின்பு பரிமாறவும்.
சூப்பரான மட்டன் மண்டி பிரியாணி ரெடி