ஒவ்வொரு நாளும் இனிய நாளாக அமையட்டும்..” அப்படினு காலெண்டர்ல போட்டாலும் நம்ம நாளை நாமதான் மோசமானதாக மாத்துறோம். அதிலும் காலையில எழுந்துக்கறதுக்குள்ள ஒரு பெரிய போராட்டமே நமக்கும் தூக்கத்துக்கு நடந்துடும்.
காலையில அரக்க பறக்க எழுந்து அரக்குறையா எல்லா வேலையையும் செஞ்சு அலுவலகத்துக்கோ அல்லது கல்லூரிக்கோ போறதையே, ரொம்ப பெரிய சாதனையாக பலர் நினைக்குறாங்க.
இதுல முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயமே காலையில எழுந்ததும் நாம்ம செய்ய கூடாத விஷயங்கள தான். நீங்க காலையில செய்யற ஒவ்வொரு செயலுக்கும் பின்னாடி பலவித எதிர் வினைகள் இருக்க கூடும்.
இது ஆண், பெண் என ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாதிப்புகளை ஏற்படுத்துதாம். காலையில எழுந்தவும் எதையெல்லாம் செய்ய கூடாதுனு இனி தெரிஞ்சிப்போம்.
நிம்மதியான தூக்கம்..!
இன்றைய காலகட்டத்தில் நிம்மதியான தூக்கம் பலருக்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் அதற்கு நீண்ட நேரம் எடுத்து கொள்கிறது. இதனால், இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் பலர் கஷ்டப்படுகின்றனர்.
இந்த நிலையில் காலையில் எழுந்ததும் ஒரு சில விஷயங்களை செய்து மேலும் பலவித பாதிப்புகளை பரிசாக வாங்கி கொள்கின்றனர்.
இருட்டிலே வாழ்பவரா..?
நம்மில் பலர் காலையில் எழுந்ததும் வேளைகளை இருட்டிலே பெரும்பாலும் செய்வோம். ஆனால், இது போன்று செய்வதால், மெலடோனின் ஹார்மோனை வெளியிட்டு மேலும் தூக்கத்தை தரும். அத்துடன் நாள் முழுக்க சோர்வையும் அவசர தன்மையையும் ஏற்படுத்தி, மன அழுத்தத்தை அதிகரிக்கவும் கூடும்.
எழுந்ததும் மெயிலா..?
அலுவலகத்தில் வேலை பார்க்கும் பலருக்கு இந்த மோசமான பழக்கம் உள்ளது. காலை எழுந்ததும் கண்ணை மூடி கொண்டே மெயிலை திறப்பார்கள். பிறகு அதில் வந்திருக்கும் ஒவ்வொன்றையும் பார்ப்பார்கள். காலை எழுந்தவுடன் இது போன்று செய்தால், மன நிலை மாறி காலையிலே தலைவலி ஆரம்பித்து விடும்.
எவ்வளவு உள்ளது..?
ஒரு சிலருக்கு காலையில் எழுந்ததும் பேங்க் பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என பார்ப்பார்கள். உளவியல் ரீதியாக இந்த பழக்கம் பல விளைவுகளை தரவல்லது. மேலும் இதனால் காலையிலே உங்களின் மன அமைதியும் காணாமல் போய் விடும்.
பெட் காப்பியா..?
காலையில் எழுந்ததும் பல் விலக்காமல் காபி குடிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால், இது உங்களுக்கு பலவித பிரச்சினைகளை தரவல்லது. வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமான கோளாறுகளை உண்டாக்கும். அத்துடன் பற்சிதைவையும் ஏற்படுத்தும்.
இணைய உலகம்
பலருக்கு இந்த பழக்கம் மூளையில் தானாகவே பதிவாகி உள்ளது. காலை எழுந்ததும் நமது கை நேராக மொபைல் போனை தான் தேடும். பிறகு அதனை திறந்ததும் சாட்டிங் அல்லது எதையாவது சர்ச் செய்வார்கள். இந்த பழக்கம் நேரடியாக உங்களின் கண், மூளை, மனசு ஆகியவற்றை பாதிக்கும். சிலர் இந்த பழக்கத்தால் அடிமையாகியும் உள்ளனர்.
அலாரம் நிறுத்தும் பழக்கமா..?
நம் மொபைலில் தொடர்ச்சியாக ஒரு 10 அலாரமை செட் செய்து வைத்திருப்போம். இந்த காலை பழக்கம் நமக்கு பலவீனத்தை தரும். குறிப்பாக உங்களின் கனவுகளை அடைய விடாமல் செய்யுமாம். மேலும், உங்களின் நிம்மதியையும் இது கெடுத்து விடும்.
கொழுப்பு நிறைந்ததா..?
நீங்கள் காலையில் சாப்பிட கூடிய உணவும் உங்களுக்கு பலவித பாதிப்புகளை தரவல்லது. குறிப்பாக கொழுப்பு சத்து அதிகம் கொண்ட உணவுகளை சாப்பிட்டால் அந்த நாள் முழுக்க உடல்நல கோளாறுகள் வர தொடங்கும். அத்துடன் காலை உணவை சாப்பிடாமலும் இருக்க கூடாது.
எழுந்ததும் சரக்கா..?
மது இப்போதுள்ள இளைஞர்களின் வாழ்வை மோசமாக புரட்டி போட்டுள்ளது. அதுவும் சிலர் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக அர்ஜுன் ரெட்டி படத்தில் வருவது போன்று இதை குடிக்கின்றனர். இது குடலை சேதப்படுத்தி சீக்கிரமே உங்கள் உயிரை வாங்கி கொள்ளும்.
சுகமான வேளை..!
மற்ற நேரங்களை விட காலை நேரம் மிக முக்கியமான ஒன்றாகும். காலையில் விரைவாக எழுந்து அந்த நாளுக்குரிய வேலைகளை ஒன்றன் பின் ஒன்றனாக நிதானமாக செய்தாலே போதும். அத்துடன், மேற்சொன்னவற்றை கடைபிடித்து வந்தால் நிம்மதி உங்களுக்கே சொந்தம்.