27.7 C
Chennai
Saturday, Sep 5, 2026
மருத்துவ குறிப்பு

21வயதில் நடுக்கம் கூடாது அலட்சியம் வேண்டாம்!

வயது, 21. என் கை, கால்கள் சாதாரணமாக நடுங்குகிறது; ஒரு வேலை செய்ய பல மணிநேரம் ஆகிறது. இதற்கு காரணம், சத்து குறைபாடா; நரம்பு தளர்ச்சியா என, தெரியவில்லை. சரி செய்ய முடியுமா? எத்தகைய மருத்துவரை அணுக வேண்டும்?

– பார்த்திபன், திண்டிவனம்.
கை, கால்கள் நடுக்கம் என்பது, வயதான காலத்தில் வரக்கூடியது. 21 வயதில் வந்துள்ளது என்றால், அலட்சியம் வேண்டாம்; மிகுந்த கவனம் வேண்டும். நடுக்கத்திற்கு நரம்பு பாதிப்பே காரணம்; ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் இந்த பாதிப்பு வரலாம்.

நீங்கள் திண்டிவனத்தில் இருப்பதால், பாண்டிச்சேரி அரசு மருத்துவமனை சென்று, நரம்பியல் நிபுணரைச் சந்தித்து சிகிச்சை பெறலாம். பயப்பட வேண்டாம்; முறையாக சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும்.

எனக்கு, 15 ஆண்டுகளாக வலிப்பு நோய் உள்ளது. மாத்திரை சாப்பிடுவது, குறைப்பது, நிறுத்தி விடுவது; மீண்டும் வேறு மாத்திரை சாப்பிடுவது என்ற நிலையில் உள்ளேன். மாத்திரையை நிறுத்தினால் ஓரிரு முறை வலிப்பு வருகிறது; மாத்திரை சாப்பிட்டால் நின்று விடுகிறது. கல்லூரி படிக்கும் எனக்கு நிரந்த தீர்வு கிடைக்காதா? அலோபதியை விட்டு வேறு சிகிச்சைக்கு மாறலாமா?

– பெயர் விரும்பாத வாசகர், சென்னை.
முதலில் உங்களுக்கு நோய் தீரும் என்ற நம்பிக்கை வேண்டும். மாத்திரையை இடையில் நிறுத்துவது; வலிப்பு வந்ததும் மீண்டும் மாத்திரை சாப்பிடுவது என்ற நடைமுறை சரிப்பட்டு வராது. மாத்திரையை இஷ்டம்போல் மாற்றக்கூடாது; டாக்டரின் ஆலோசனை அவசியம். அலோபதி மருத்துவத்தில், முற்றிலும் வலிப்பு நோயைக் கட்டுப்படுத்த முடியும். நரம்பியில் டாக்டரின் ஆலோசனை பெற்று, மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை, இடைவிடாது மாத்திரை சாப்பிட வேண்டும். இனியாவது, டாக்டர் ஆலோசனையை முறையாக பெற்று, இடை இடையே நிறுத்தாமல் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுங்கள்; வலிப்பு நோய் நீங்கும்.
டாக்டர். கே.பானு
நரம்பியல் நிபுணர், சென்னை.

Related posts

உங்கள் உடல் வகை வாதமா? பித்தமா? கபமா?

nathan

உங்க மார்பகத்தில் அரிப்பு ஏற்படுவதற்கு இதுதான் காரணமாம் – பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா தக்காளி அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள்?

nathan

நீங்க ஒரு அப்பாவா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக் கூடாத மசாலா பொருட்கள்!!!

nathan

பாசிட்டிவ் எண்ணங்களை வளர்க்க உதவும் 10 வழிகள்!

nathan

போதை பழக்கத்தில் இருந்து எளிமையாக மீண்டு வர இதை மட்டும் முயன்று பாருங்கள்!

nathan

மஞ்சள் நிறமாக பற்கள் மாற என்ன காரணம்?

nathan

பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பின்..தெரிந்துகொள்வோமா?

nathan