31.9 C
Chennai
Friday, May 31, 2024
mqdefault
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவுமருத்துவ குறிப்பு

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

நம்மில் பலருக்கு காய்கறிகளில் சில பிடிக்காது. பரிமாறும்போதே, அசூயையாகப் பார்த்து ஓரம்கட்டிவிடுவார்கள். சிலர் கையால்கூடத் தொடமாட்டார்கள். பீட்ரூட், சேனைக்கிழங்கு… என நீள்கிற அந்தப் பட்டியலில் முட்டைக்கோஸுக்கும் ஓர் இடம் உண்டு. சிலருக்கு இது அரைவேக்காடாக இருந்தால் பிடிக்காது; சிலருக்கு முழுவதுமாக வெந்திருந்தாலுமே பிடிக்காது.

என்னதான் கடலைப்பருப்பு, தேங்காய்த்துருவல், வாசனைக்குப் பெருங்காயம் எல்லாம் சேர்த்து, பொரியலாகப் பரிமாறினாலும், `வேண்டாம்’ என்பதுபோல பரிமாறுவதற்கு முன்னதாகவே கைகள் நீண்டு தடைபோடும்.

`முட்டைக்கோஸ் ஒரு வொண்டர்ஃபுல் வெஜிடபுள்’. இந்த உண்மை பலருக்குத் தெரிவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது; மூட்டுவலி, கால் வீக்கத்தைப் போக்கக்கூடியது என்கிற நம்பிக்கை பரவலாக எழுந்துள்ளது.

mqdefault

முட்டைக்கோஸ் இலை வகையைச் (Leafy vegetable) சார்ந்த ஒரு தாவர வகை. வைட்டமின் சி, கே, பி 6, பி1, பி 2, நார்ச்சத்து, ஃபோலேட், காப்பர், பொட்டாசியம், மாங்கனீஸ், கால்சியம், இரும்புச்சத்து, கோலின், மக்னீசியம், நியாசின், புரோட்டீன், பாஸ்பரஸ், பேன்டோதெனிக் அமிலம் (Pantothenic acid) என எக்கச்சக்க சத்துகள் நிறைந்துள்ளன.

அதனால்தான் மாற்று மருத்துவத்தில் முட்டைக்கோஸுக்கு எப்போதுமே தனியான ஓர் இடம் உண்டு. குறிப்பாக, இதன் இலையை சுளுக்கு, கட்டி, வீக்கம், புண்கள் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.

விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கும், `ஆர்த்ரிட்டிஸ்’ எனப்படும் மூட்டுவலி தொடர்பான பிரச்னைகளுக்கும் முட்டைக்கோஸின் இலையில் உள்ள வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருள்கள் (Anti-Inflammatory properties) நல்ல தீர்வைத் தரக்கூடியவை என நம்புகிறார்கள் மாற்று மருத்துவ சிகிச்சை முறையில் உள்ளவர்கள்.

பல வருடங்களாகவே மூட்டுகளில் ஏற்படும் வலிகளைப் போக்கவும், வீக்கங்களைக் குறைக்கவுமான இயற்கை சிகிச்சைக்கு முட்டைக்கோஸ் பயன்பட்டு வந்திருக்கிறது. அதிகச் செலவில்லாத சிகிச்சை.

எனவே, இயற்கையான முறையில் மூட்டுவலிக்கு இது தீர்வு தரும் என்கிற நம்பிக்கை காரணமாக, பல மூட்டுவாத (Arthritis) நோயாளிகளின் கவனம் இப்போது முட்டைக்கோஸின் பக்கமும் திரும்ப ஆரம்பித்திருக்கிறது.

`கௌட்’ (Gout) எனப்படும் கீல்வாதப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் முட்டைக்கோஸால் சிகிச்சை செய்துகொண்டபோது அது வலியைத் தணித்துள்ளது.

முட்டைக்கோஸ் சிகிச்சையை எப்படிச் செய்வது?

* சில முட்டைக்கோஸ் இலைகளை எடுத்து, நன்றாகக் கழுவி ஒரு பிளாஸ்டிக் கவரில் போடவும். இதை அப்படியே ஃப்ரிட்ஜில் உள்ள ஃப்ரீஸரில் வைத்துவிடவும்.

* ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகள் ஜில்லென்று ஆகவேண்டும்; அதே நேரம் அதன் வளைதன்மை மாறாமலும் இருக்க வேண்டும்.

* வலி வரும்போது அல்லது வலி வருவதாக உணரும்போது, ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸின் இலைகளை எடுக்கவும். வலியுள்ள இடத்தில் அந்த இலைகளை வைத்து, ஒரு துணியால் கட்டவும். வெதுவெதுப்பாக இருக்கும் தோல்பகுதி சில்லென்று ஆகும்வரை அப்படியே வைத்திருக்கவும்.

இந்தச் சிகிச்சையில், முட்டைக்கோஸில் இருக்கும் கீல்வாதத்துக்கு எதிராகச் செயல்படும் ரசாயனங்கள் தோல் வழியாக ஊடுருவி, மூட்டுகளில் சேர்ந்திருக்கும் வலிக்கான காரணிகளை (Uric crystal deposits) கரைந்துபோகச் செய்யும். அல்லது குறைந்தபட்சம் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கச் செய்யும்.

* மூட்டுகளில் வீக்கம் உள்ளவர்கள் ஃப்ரீஸரில் வைத்திருக்கும் முட்டைக்கோஸ் இலைகளை எடுக்கவும். வீங்கிய இடத்தில் இலைகளை வைத்து, துணியால் கட்டுப்போடவும்.

அப்படியே ஒரு சேரில் அமர்ந்து, வலியுள்ள பாதத்தை மட்டும் 30 நிமிடங்களுக்கு உயர்த்திப் பிடிக்கவும். முட்டைக்கோஸுக்கு நீரை ஈர்க்கும் சக்தி உண்டு. இது, மூட்டில் உள்ள அதிகப்படியான திரவத்தை எடுத்து, வீக்கத்தைக் குறைத்துவிடும்.

இந்தச் சிகிச்சை பற்றி இயற்கை மருத்துவர் வெங்கடேஷ்வரனிடம் கேட்டோம்… “முட்டைக்கோஸில் மருத்துவக் குணங்கள் நிறைந்திருப்பது உண்மைதான். ஆனால், காலில் வீக்கம், மூட்டுவலி உள்ளவர்கள் இதை முதலுதவி சிகிச்சையாகச் செய்துகொள்ளலாம்.

கவனம்:

முட்டைக்கோஸ் அலர்ஜி என்பவர்கள் இதைச் செய்துகொள்ள வேண்டாம். இந்தச் சிகிச்சையின்போது முட்டைக்கோஸின் இலை வைத்திருக்கும் இடத்தில் எரிச்சலோ, அரிப்போ, வீக்கமோ ஏற்பட்டால், உடனே அதை அகற்றிவிட வேண்டும். அந்தப் பிரச்னை தொடர்ந்தால் நிச்சயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

Related posts

இரண்டாவது குழந்தையை விரும்பும் தம்பதியினரின் கவனத்திற்கு!!

nathan

உங்களுக்கு தெரியுமா கர்ப்பிணிகள் இந்த 3 பழங்களையும் சாப்பிடவே கூடாதாம்…

nathan

உங்களுக்கு தெரியுமா மூலநோய்க்கு நிவாரணம் தரும் குப்பைமேனி….!

nathan

டெங்குவை கட்டுப்படுத்தும் அம்மான் பச்சரிசி

nathan

நம்பமுடியாத உண்ணக்கூடிய புரதம்: முட்டை மற்றும் அவற்றின் ஊட்டச்சத்து நன்மைகள்

nathan

நீங்கள் பயன்படுத்தும் இந்த பொருட்கள் கெட்டுப்போகாமல் நீண்ட நாள் இருக்க வேண்டுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இரவு படுக்கைக்கு போகும் முன்னர் நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியவை!!!

nathan

உளுந்தங்கஞ்சி

nathan

பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்ட கைப்பையும் பெண்களின் ஆரோக்கியமும்….

sangika