27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
fjgfj
ஆரோக்கியம்ஆரோக்கிய உணவு

சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்தும்….

சுவையோ..சுவையோ..!

குலாப் ஜாமூன், லட்டு, ஜிலேப்பி போன்ற சுவைமிக்க இனிப்பு வகைகளை நாம் அதிகம் விரும்பி உண்ணுவோம். இவற்றை செய்து வைத்தாலே நமக்கு நாக்கில் எச்சி ஊறும். சர்க்கரை அதிகம் கொண்ட பண்டங்கள் ஒரு வகையில் நமக்கு இன்பத்தை தந்தாலும், மறுபுறத்தில் நமக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்துமாம்.

அதிக சர்க்கரை..அதிக கொழுப்பு..!

நாம் சர்க்கரையை சாப்பிடும் போது, நமது உடலில் கொழுப்புகள் அதிக அளவில் சேர தொடங்கும். சர்க்கரையை அதிகமாக சாப்பிட்டால் கொழுப்பின் அளவும் அதிகரிக்க கூடும். இதனால் தான், சர்க்கரை நோயாளிகளை இனிப்பு பண்டங்களை தவிர்க்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில், இவை சர்க்கரையின் அளவை அதிகரித்து இதய நோய்களையும் உருவாக்கி விடும்.

fjgfj

செரிமான மண்டலம்…

நாம் சர்க்கரை சாப்பிடும் போது, அவை வயிற்றுக்குள் சென்று செரிமான மண்டலாத்தை அடைந்து விடும். சிறுகுடலில் உள்ள நொதிகள் அவற்றை குளுக்கோஸாக மாற்றி ரத்தத்தின் வழியாக மற்ற உறுப்புகளுக்கு அனுப்பி, இறுதியில் அவை ஆற்றலாக மாறி விடும்.

கணையம்- என்ன வேலை..?

கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், இன்சுலின் அளவையும் தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்கும். அதாவது, நீங்கள் அதிக அளவில் சர்க்கரை சாப்பிட்டால் அவை உடலின் முழு செயல்பாட்டையும் பாதிக்கும் என்பதை இவை உணர்த்துகிறது.

இன்சுலின் அளவு முக்கியம்..!

சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் இன்சுலின் உற்பத்தி சீர்கேடு அடையும். அதாவது, இவை ஹார்மோன்களிலும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதையே இவை உணர்த்துகிறது. இதனால், பல வித நோய்களின் வருகை படிப்படியாக அதிகரிக்க தொடக்கி விடும்.

வயதான தோற்றம்

மிக விரைவிலே வயதானவரை போன்று மாற்ற கூடிய தனித்தன்மை இந்த சர்க்கரைக்கு உள்ளது. அத்துடன் சருமத்தின் அழகும் மெல்ல மெல்ல குறைய தொடங்கி விடுமாம். சர்க்கரை அதிகம் சாப்பிடுகிண்றீர்கள் என்பதை உங்களின் முக சுருக்கங்களை வைத்தே கண்டறிந்து விடலாம்.

மன அழுத்தம்

சர்க்கரையை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மன அழுத்தம் வரம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மூளையின் செயல்திறனை பாதித்து புத்தியை மழுங்கடிக்க செய்கிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டால், கூடவே இந்த ஞாபக மறதி, மன அழுத்தம் போன்ற பல பிரச்சினைகள் அடுக்கி கொண்டு வந்து விடுமாம்.

இதயமே..என் இதயமே..!

நீரிழிவு நோய் இருக்கும் பலருக்கு இதயம் சார்ந்த நோய்களும் இருக்க கூடும். சர்க்கரையை அதிக அளவில் எடுத்து கொண்டால், இதய பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை வெறும் சர்க்கரையை சாப்பிடாமல், குளிர் பானமாகவோ, இனிப்பு உணவாகவோ, சாப்பிட்டாலும் பாதிப்பு அதிகம்.

கவனம் அவசியம்..!

மனிதனின் மனிதனின் நாக்கு ஒரு முறை ஒரு பொருளை சுவை கண்டு, பிடித்து விட்டால் அதனை அவ்வளவு சீக்கீரம் விட தோணாது. ஏனெனில், நீங்கள் உங்களை கட்டுப்படுத்தி குறைந்த அளவில் சர்க்கரையை எடுத்து கொண்டால், எந்த வித பெரிய ஆபத்தும் வராது. மீறினால் பிரச்சினை உங்களுக்கு தான்.

Related posts

கருவுற்றுள்ள தாய்மார்களுக்கு ரத்தச் சோகை ஏற்பட்டிருந்தால்…..

nathan

உங்களுக்கு கரோனா பாதிப்பா?… என்ன சாப்பிடுவது?

nathan

ஆட்டுப்பால் குழந்தை நலத்திற்கு நல்லது; ஆய்வில் தெரிய வந்துள்ளது!

nathan

வெள்ளரிக்காய் நன்மைகள் (Cucumber Benefits in Tamil)

nathan

வாழைப்பழ மோர் குழம்பு

nathan

மருத்துவ பண்புகள் நிறைந்த வெங்காயம் மோர்!…

sangika

கல்சியம் சத்து குறைபாடா? அப்ப இத படிங்க!

nathan

தயிர் தினமும் சாப்பிடுவதால் ஆயுள் அதிகரிக்குமா?தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! சளி தொந்தரவுக்கு தீர்வு தரும் பூண்டு மஞ்சள் பால்

nathan