29.1 C
Chennai
Monday, May 12, 2025
akthikeerai 1
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா கருவளையம் பிரச்சனைகளை போக்க அருமையான குறிப்புகள்

முகத்திற்கு அழகினைத் தருவது கண்கள் தான், ஆனால் அதிக வேலைச் சுமையினாலும் போதுமான தூக்கம் கிடைக்காததாலும் அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றால் கருவளையம் உண்டாகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்றவையும் காரணமாக அமைகிறது.

இவ்வாறு கருவளையங்கள் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றம் உருவாகும்.மேலும் வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே எவ்வாறு கருவளைத்தை போக்கலாம் என்று பார்ப்போம்.

அகத்திக் கீரை
அகத்திக் கீரையை சிறிதளவு தேங்காய் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், கருவளையம் மற்றும் தோல் பிரச்சனைகள் வராது.

பூசணிக்காய்
கருவளையம் விரைவில் மறைய பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கண்களின் மேல் வைக்கலாம்.

சாமந்திப் பூ
சாமந்திப் பூவின் இதழ்களை 2 கைப்பிடி அளவு எடுத்து 1 கப் கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு, உடனே மூடி வைக்க வேண்டும்.

பின் அதை 24 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாமரைப்பூ
தாமரைப்பூ இதழ்களை தண்ணீர் விடாமல் அரைத்து, அதில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய், 1 ஸ்பூன் தேன் கலந்து 7 மணி நேரம் வெளியே வைத்து, பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களை சுற்றி தடவி, 1 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் வெள்ளரி
1 வெள்ளரித் துண்டு, 1/2 தக்காளி ஆகிய இரண்டையும் அரைத்து இமைகளின் மேல் தடவி, 2 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை ஓரிரு வாரங்கள் செய்து வந்தால், கருவளையம் மறையும்.

ஆரஞ்சுப்பழ சாறு
ஆரஞ்சுப்பழத்தின் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சிறிது நேரம் கழித்து, இதமான வெந்நீரில் கழுவ வேண்டும். அதன் பின் அந்த இடத்தில் வெள்ளரிக்காயை தேய்த்து வந்தால், கருவளையம் மறையும்.akthikeerai 1

Related posts

எலுமிச்சை பேஷியல்

nathan

எளிய நிவாரணம்! குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சி நொடியில் போக்க வேண்டுமா?

nathan

இயற்கை பொருட்களை கையாள்வதன் மூலம் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகள் நீங்கும்……

sangika

உங்கள் அழகை இரட்டிப்பாக்க இந்த பழத்தை உபயோகித்திருக்கிறீர்களா?

nathan

கிளீன் அண்டு கிளியர் சருமம்… பாதுகாக்க ஈஸி டிப்ஸ்!

nathan

சிவப்பழகை பெற

nathan

எண்ணைய் பசை சருமத்திற்கு…!

nathan

சூப்பர் டிப்ஸ்! முக இளமை முதல் முடி உதிர்வு வரை உதவும் பிரியாணி இலை டீ..!

nathan

வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைந்துவிடும்!

nathan