34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா கருவளையம் பிரச்சனைகளை போக்க அருமையான குறிப்புகள்

முகத்திற்கு அழகினைத் தருவது கண்கள் தான், ஆனால் அதிக வேலைச் சுமையினாலும் போதுமான தூக்கம் கிடைக்காததாலும் அதிக சிந்தனை, மன உளைச்சல் போன்றவற்றால் கருவளையம் உண்டாகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைவாக இருப்பது, நீண்ட நேரம் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருப்பது போன்றவையும் காரணமாக அமைகிறது.

இவ்வாறு கருவளையங்கள் வருவதால் முகம் சற்று பொலிவிழந்து, முதுமைத் தோற்றம் உருவாகும்.மேலும் வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களே வைத்தே எவ்வாறு கருவளைத்தை போக்கலாம் என்று பார்ப்போம்.

அகத்திக் கீரை
அகத்திக் கீரையை சிறிதளவு தேங்காய் பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் குளித்தால், கருவளையம் மற்றும் தோல் பிரச்சனைகள் வராது.

பூசணிக்காய்
கருவளையம் விரைவில் மறைய பூசணிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி கண்களின் மேல் வைக்கலாம்.

சாமந்திப் பூ
சாமந்திப் பூவின் இதழ்களை 2 கைப்பிடி அளவு எடுத்து 1 கப் கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு, உடனே மூடி வைக்க வேண்டும்.

பின் அதை 24 மணி நேரம் கழித்து அந்தத் தண்ணீரை ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாமரைப்பூ
தாமரைப்பூ இதழ்களை தண்ணீர் விடாமல் அரைத்து, அதில் 2 ஸ்பூன் விளக்கெண்ணெய், 1 ஸ்பூன் தேன் கலந்து 7 மணி நேரம் வெளியே வைத்து, பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டு, கண்களை சுற்றி தடவி, 1 மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

தக்காளி மற்றும் வெள்ளரி
1 வெள்ளரித் துண்டு, 1/2 தக்காளி ஆகிய இரண்டையும் அரைத்து இமைகளின் மேல் தடவி, 2 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதை ஓரிரு வாரங்கள் செய்து வந்தால், கருவளையம் மறையும்.

ஆரஞ்சுப்பழ சாறு
ஆரஞ்சுப்பழத்தின் சாற்றை கண்ணுக்குக் கீழே தேய்த்து சிறிது நேரம் கழித்து, இதமான வெந்நீரில் கழுவ வேண்டும். அதன் பின் அந்த இடத்தில் வெள்ளரிக்காயை தேய்த்து வந்தால், கருவளையம் மறையும்.

Related posts

கடலையை வைத்து முக அழகை பெறுவது எப்படி?…

sangika

வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம்

nathan

புது அம்மாவிற்கான அன்னாசி ஸ்க்ரப் !!

nathan

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், துளைகள் , மருக்களை இப்படியும் இல்லாதொழிக்கலாம்!

nathan

எண்ணெய் பசை சருமத்தினால் நீங்கள் பெறும் 5 பயன்கள்!!! தொடர்ந்து படிக்கவும்…

nathan

சருமத்தை மின்னச் செய்யும் பூசணிக்காய் ஃபேஸ் பேக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

nathan

கருவளையத்தினால் கவலையாக இருக்கிறீர்களா? இதோ அருமையான டிப்ஸ்

nathan

2 வாரத்தில் முகத்தில் உள்ள கொழுப்பை கரைக்கணுமா? அப்ப இத படிங்க!

nathan