34.6 C
Chennai
Tuesday, May 13, 2025
300.053.800.668.160.90 1
மருத்துவ குறிப்பு

உங்களுக்கு தெரியுமா ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட அற்புத செடி!

அழகுக்காக வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் நந்தியாவட்டம் செடியில், மருத்துவ குணங்களும் ஏராளமாக உள்ளன.

நந்தியாவட்டம்

நந்தியாவட்டம் செடியில் ஓரிதழ், ஈரிதழ், மூவிதழ் என மூன்று வகைகள் உள்ளன. இவற்றில் பூக்களின் அளவு மற்றும் இதழ்களில் மட்டுமே மாறுபாடு இருக்கும்.

எனினும் இரண்டடுக்கு நந்தியாவட்டம் முழுக்க முழுக்க மருத்துவ குணங்களைக் கொண்டது. இதனுடைய இலை, பட்டை, வேர், மலர் என அனைத்தும் மருத்துவ பலன்களை அளிக்கும். அந்த மருத்துவ பயன்கள் குறித்து காண்போம்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

கண் பிரச்சனைகள்

கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் இந்த நந்தியாவட்டத்தின் பூ சரி செய்யும். குறிப்பாக கண் எரிச்சல், கண் உஷ்ணத்தை குறைக்க, கண் பார்வை தெளிவடைய இந்த பூ உதவும்.

இரவில் இதன் பூக்களை தண்ணீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து அந்த தண்ணீரில் கண்களை அலச வேண்டும். இதன்மூலம் கண் உஷ்ணம் குறையும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

பல் வலி

நந்தியாவட்ட செடியின் வேர்ப்பகுதியை சிறிதளவு எடுத்து, நன்கு வாயில் மெல்ல வேண்டும். அதன் சாறு பல்லின் ஈறுகளில் இறங்குவதன் மூலம் பல் வலி விரைவில் குணமடையும்.

625.0.560.350.160.300.053.800.668.160.90

காயங்கள்

நந்தியாவட்ட செடியின் கிளையை உடைத்து அதில் வடியும் பாலை, உடலில் ஏற்பட்ட காயங்களின் மீது தடவினால் விரைவில் காயங்கள் ஆறிவிடும்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நந்தியாவட்ட இலைகளை பறித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி குடித்து வர வேண்டும். இதன் மூலம் விரைவில் நல்ல பலனை அடையலாம்.

சரும பிரச்சனைகள்

இந்த செடியின் பட்டை கண் மற்றும் சருமப் பிரச்சனைகளுக்கு உதவுகின்றது. அதற்காக செய்யப்படும் சூரணங்களுக்கும் இது கூட்டுப் பொருளாக சேர்க்கப்படுகிறது.

மூலிகை பல்பொடி

நந்தியாவட்டப் பூக்களை நிழலில் உலர்த்தி, அதை மூலிகை பல்பொடியில் சேர்க்கப்படுகிறது. இது பற்களின் வேர்கள் உறுதியாகும். இது சொத்தைப்பல் வராமலும் பார்த்துக் கொள்ளும். அத்துடன் பல் ஈறுகளில் ரத்தம் வடிதலையும் சரிசெய்யும்.

Related posts

இப்படியும் பற்களை வெண்மை ஆக்கலாம் என உங்களுக்கு தெரியுமா?

nathan

கழுத்து வலிக்கு எளிய சித்த மருத்துவம்

nathan

கர்ப்பகாலத்தில் பயணம் செய்வது கருச்சிதைவை ஏற்படுத்துமா?

nathan

சர்க்கரை நோய்க்கு தீர்வு தரும் ஆயுர்வேத மருந்துகள்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்!

nathan

மனநோயின் அறிகுறிகள்

nathan

உடல் நலம் காக்கும் வெற்றிலை மூலிகை

nathan

வாசனைத் திரவியங்களால் மார்பகப் புற்றுநோய் அபாயம்

nathan

இத படிங்க சீராக்கும் கருஞ்சீரகம் சீறிப்பாய்ந்து.!

nathan