32.1 C
Chennai
Sunday, May 11, 2025
naildesign 11 1470893556
நகங்கள்

உங்க ஆரோக்கியமான விரல் நகங்களுக்கு சூப்பர் டிப்ஸ்….

பெண்களுக்கு அழகுக்கு அழகு சேர்ப்பவை விரல்கள் மற்றும் நகங்கள். இவைகளை அழகுற பாதுகாத்தால் வசீகரம் கூடும். அதற்கான சில டிப்ஸ்…

* விரல்கள் மற்றும் நகங்கள் சொர சொரப்பு நீங்கி பளபளக்க நல்லெண்ணெயைத் தடவி மசாஜ் செய்யலாம்.
* ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி விரல்களின் மீது தேய்த்து ஊறவைத்து பின்பு கழுவி வந்தால் நகங்கள் உடையாமல் இருக்கும்.

* நகம் கருமை நிறமாக மாறி சொத்தையாகி இருந்தால் துத்தி இலையை சாம்பிராணியுடன் சேர்த்து அரைத்து தடவினால் விரைவில் சொத்தை மறையும். கருமை நிறமும் மாறும்.
* உடலில் கால்சியம் சத்து குறைவதால் நகங்கள் பாதிக்கப்படுகின்றன. கால்சியம் மாத்திரைகளையோ அல்லது கால்சியம் சத்து நிறைந்த உணவுகளையோ உட்கொள்ளுதல் நல்ல பலனைத் தரும்.
* நகங்களைச் சுற்றி தடித்தும், வலியும் இருந்தால் வெதுவெதுப்பான தண்ணீரில் டெட்டால், பெப்பர்மின்ட் ஆயில் சேர்த்து அதில் நகங்கள் படும்படி வைத்து பின்பு கழுவினால் வலி நீங்கி நகங்கள் சுத்தமடையும்.
* வெற்றிலையில் சிறிதளவு வெள்ளை சுண்ணாம்பு கலந்து அரைத்து நகத்தில் தடவினால் நகத்தைச் சுற்றி வரும் புண் குணமாகும்.
* வெள்ளை ஜெலட்டின் (கால்சியம் சத்துள்ளது) இரண்டு தேக்கரண்டி எடுத்து நான்கு தேக்கரண்டி இளஞ்சூடான தண்ணீரில் கரைத்து விரல்களின் மீது பூசி ஊறவைத்து கழுவி வர நகங்கள் உடையாது.nail 13 1484298114

Related posts

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

நகத்தை சுத்தம் செய்வது எப்படி?…

nathan

நகங்கள் உடைந்து போகுதா கவலையை விடுங்க

nathan

விரல் நகங்களை பராமரிப்பது எப்படி?

nathan

நகத்தைச் சுற்றி தோல் உரிவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள்

nathan

நகம் பராமரிப்பு

nathan

நகங்களின் பளபளப்பிற்கும் வளர்ச்சிக்கும்

nathan

நகத்திற்கு இயற்கை மருதாணியே சிறந்தது

nathan

நகங்கள் உடைந்து போகிறதா…

nathan