அழகு குறிப்புகள்ஆரோக்கியம்நகங்கள்

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ்!…

நம்மில் சிலருக்கு கோவம் வந்தாலும் சரி, பயம் வந்தாலும் சரி நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். நகம் கடிப்பது என்பது ஒரு கெட்டப் பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், நாம் அதை காதில் வாங்குவதே இல்லை. நகம் கடிப்பதால் உயிருக்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா?

நாம் நகம் கடிப்பதால், உடலில் பாக்டீரியா தொற்று கட்டுப்படுத்த இயலாமல் அதிகரிக்கும். இதனால் உறுப்பு செயலிழப்பு ஏற்படுகிறது.

திசுக்கள் சேதமடைகிறது. முறையான சிகிச்சை அளிக்காமல் இருந்தால் இந்த செப்சிஸ் தொற்று, செப்டிக் ஷாக் என்னும் உயிருக்கு ஆபத்தான நிலையைத் தோற்றுவிக்கும். மேயோ கிளினிக்கின் படி, சுவாச துடிப்பு அதிகரித்தல், மூச்சு விட சிரமம் அடைதல், ஈரம் அதிகம் உள்ள சருமம், குழப்பம், வயிற்று வலி, போன்றவை செப்சிஸ் நோயின் அறிகுறியாகும்.

nails1

வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், செப்சிஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளவர்கள். எந்த வித தொற்று ஏற்பட்டாலும், அதில் சீழ் பிடித்து அபாயத்தை உண்டாக்கலாம் என நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அறிவித்துள்ளது.

நகம் கடிப்பதால் வரும் செப்சிஸ் என்ற சீழ் பிடிப்பு நோயைப் பற்றி பலருக்கும் தெரியாது. அதற்கான அறிகுறிகள் பற்றிய எந்த ஒரு தகவலும் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதனை பற்றிய விழிப்புணர்வு அவசியம் வேண்டும். எந்த வயது மக்களையும் இந்தத் தொற்று தாக்க முடியும் என்று கூறுகின்றனர். நீங்களும் ஹனோமன் போல் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளவரா?? உடனடியாக இந்த பழக்கத்தைக் கை விடுங்கள். உங்கள் உயிரைக் காத்துக் கொள்ளுங்கள்.

நகங்களை நீளமாக வளர்க்காமல் வெட்டி, சிறியதாக வைத்துக் கொள்ளலாம்.
நகம் கடிக்கும் பழக்கத்திற்கு மாற்றாக வேறு எதாவது நல்ல பழக்கத்தைக் கைக்கொள்ளலாம்.உதாரணத்திற்கு ஸ்ட்ரெஸ் பால் விளையாட்டு போன்றவை.
கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button