29.6 C
Chennai
Monday, Jan 27, 2025
15 1489574504 1
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் ஏன் தர்பூசணியின் தோலை கட்டாயம் சாப்பிட வேண்டும் என

வெயிலுக்கு குளுகுளுவென தர்பூசணியை சாப்பிடுவது குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமானது. தர்பூசணியில் அதிக நீர்சத்து பொட்டாசியம் மற்றும் சக்திவாய்ந்த லைகோபீன் இருப்பது தெரிந்த விஷயமே.

அதே சமயம் தர்பூசணியின் ஓட்டுப்பகுதியை நாம் தூக்கியெறிந்துவிடுவோம். ஆனால் இதைப் படித்தால் அதன் கடினமான ஓட்டுக் பகுதியை தூக்கியெறிய மாட்டீர்கள்.

உடல் தசை வலிமைக்கு :
தர்பூசணியின் ஓட்டில் உள்ள சிட்ருலின் என்ற அமினோ அமிலம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. இதனால் ஜிம்மில் பயிற்சி செய்பவர்கள் தர்பூசணியின் ஓட்டையும் சாப்பிட்டால் தசை வளர்ச்சி அதிகரிக்கும்.

உடல் எடை குறைய : தர்பூசணியின் தோலில் நார்ச்சத்து உள்ளது. கடின உப்புக்களை நீர்க்கச் செய்து வெளியேற்றிவிடும். இதனால் உடல் எடை குறையும்.

ரத்தக் கொதிப்பு : தர்பூசணியின் தோல் பகுதி உடல் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மருத்துவ ரீதியாக இது நிருபிக்கப்பட்டுள்ளது.

சிறு நீரகத்திற்கு சிறப்பு : சிறு நீரகத்தின் பாரத்தை தர்பூசணியின் தோல்பகுதி குறைக்கிறது என தெரியுமா? சிறு நீரகத்தில் கிருமித் தொற்று ஏற்படாதவாறும், சிறு நீரகக் கற்கள் உண்டாகாதவாறும் தடுக்கிறது.

புரோஸ்டேட் கேன்சர் : தர்பூசணியின் ஓட்டிலுள்ள சக்தி வாய்ந்த லைகோபென் ஆன்டி ஆக்ஸிடென்ட் பல்வித புற்று நோய்களை வராமல் தடுக்கிறது. குறிப்பாக ஆண்களை பாதிக்கும் ப்ரோஸ்டேட் கேன்சர் வராமல்தர்பூசணியின் தோல்பகுதி காக்கிறது.15 1489574504 1

Related posts

மூல வியாதியையும், மூலச்சூட்டையும் குணப்படுத்த சூப்பர் டிப்ஸ்……

nathan

வைட்டமின் ஏ குறைபாடு உள்ள ஒரு நபர் அடிக்கடி நோய்த்தொற்றுகளை அனுபவிக்கும் வாய்ப்பு அதிகம்.. தவிர்க்க தினமும் என்ன செய்யணும் தெரியுமா?

nathan

சளியை துரத்தும் தூதுவளை துவையல்!

nathan

சமைக்கலாம் வாங்க! கொண்டைக்கடலை கீரை சுண்டல்

nathan

ஆண்மைக் குறைவை நீக்கும் சுப்பர் மருந்து!!

nathan

தெரிந்துகொள்வோமா? சர்க்கரைவள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் என்ன பயன்கள் கிடைக்கும் ?

nathan

அதிர்ச்சி தகவல்!! கடுகு எண்ணெய் நமது மூளையை பாதிக்கிறதா?

nathan

அடிக்கடி நண்டு உணவுகள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தெரிஞ்சிக்கங்க…

nathan

சளி தொல்லையை போக்கும் துளசி ரசம்

nathan