1531562233 7072
ஆரோக்கிய உணவு

கனவாய் மீன் வறுவல் செய்ய..!

தேவையான பொருட்கள்:

கனவாய் மீன் – கால் கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சின்னவெங்காயம் – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் – 1
மிளகுத்தூள்- 2 டீஸ்பூன்
செய்முறை:

மீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும்.

வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.1531562233 7072

Related posts

நீங்கள் சமையலுக்காக எந்த எண்ணெய் பயன்படுத்துறீங்க?

nathan

சிறந்த நிவாரணி..!! தாகம் தணிக்கும் தர்பூசணி.. இதயம் முதல் சிறுநீரகம் வரை…

nathan

மைக்ரோவேவ் செய்யும் அற்புதமான மாயங்கள்!

nathan

ஆண்களே உஷார்! மிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து!

nathan

இளநீர் குடிப்பது நல்லதே! ஆனா இவங்க மட்டும் குடிக்க வேணாம்…

nathan

vitamin b foods in tamil – வைட்டமின் B-வகைகள்

nathan

தங்கமான விட்டமின்

nathan

5 நிமிட கஞ்சி….. யாரெல்லாம் தினமும் சாப்பிடலாம்!

nathan

தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா?

nathan