34.9 C
Chennai
Wednesday, May 14, 2025
drumstickflower 26 1501071749
மருத்துவ குறிப்பு

ஆண்மை குறையாமல் இருக்க, முருங்கைப்பூ எப்படி பயனளிக்கும் தெரியுமா?அப்ப இத படிங்க!

நம் தேசத்தில் காணும் இடங்களில் எல்லாம் இருப்பதும், கிராமங்களில், வீடுகளில் எந்த மரம் இல்லாவிட்டாலும், முருங்கை மரம் கட்டாயம் இருக்கும். பூக்களின் விளைச்சலில் வீடு தோறும் பூக்களுடன் காய்கள் மரமெங்கும் காய்த்து தொங்குவது காணவே, அற்புதமாக இருக்கும். சித்தர்கள் மனிதர்களுக்கு இந்த மரங்கள் தரும் நல்ல பலன்களைப் போற்றியே, பிரம்ம விருட்சம் என்று முருங்கை மரத்தை அழைத்தனர். முருங்கை இலையை, காய்களை, அதன் கீரைகளைப் பற்றி அதிகம் அறிந்திருப்போம். முருங்கைப்பூ பற்றி அதிகம் அறிந்திருப்போமா, இல்லையென்றால் இந்தப்பதிவு அதையும் நீங்கள் அறிந்துகொள்ள துணைபுரியும்.

முருங்கைப்பூ, கொத்துகொத்தாக மரங்களில் பூத்துக்குலுங்கும் அழகே தனி. இந்த முருங்கைப்பூவே தாய்மார்களின் பால் சுரப்பிற்கும், ஆண்களின் உடல் வலிவிற்கும் துணையாக விளங்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மைமிக்க “வைட்டமின்-A” மற்றும் நலம் தரும் தாதுக்களை, தன்னில் அதிக அளவில் கொண்டது.

சிலருக்கு மனச்சோர்வு மற்றும் மனஉளைச்சல் காரணமாக, இரத்தத்தில் பித்தம் எனும் உடல் சூடு அதிகரித்து, அதனால், சோர்வு, தூக்கமின்மை, தலைவலி மற்றும் தலை கிறுகிறுப்பு ஏற்படும்.

இவர்கள் எல்லோருக்கும் நிவாரணம் தரும் அருமருந்தாக எப்படி முருங்கைப்பூ   இருக்கிறது என்று பார்ப்போமா?

உடல் புத்துணர்வு : முருங்கைப்பூக்களை மரங்களிலிருந்து கொய்து, நன்கு அலசி அதை வெயிலின் நிழலில் நன்கு காய வைக்க பூவின் நீர்த் தன்மை வற்றி பூக்கள் காய்ந்து சருகாகும்.   இவற்றை எடுத்து தூள் செய்து, தினமும் இருவேளை, தண்ணீரில் கலந்து சுட வைத்து மூன்றில் இரு பங்கு நீர் வற்றும் வரை சூடாக்கி பருகி வர விரைவில் இது வரை துன்பங்கள் தந்து வந்த தூக்கமின்மை, நரம்புத் தளர்ச்சி வியாதிகள் எல்லாம் விரைவில் நீங்கி உடல் புத்துணர்வு பெரும்.

மாத விடாய் காலத்தில் : இந்த மருந்துக்கலவையே இந்த முருங்கைப்பூ தீநீரே, பெண்களின் மாதவிலக்கு நேரங்களில் உடலின் பலவீனமான நிலையால் அவர்களுக்கு உண்டாகும் வயிற்று வலி, அதிக கோபத்தால் அடையும் தலைவலி போன்றவற்றை தீர்க்கும் வல்லமை மிக்கதும் ஆகும். இதைப் போலவே, கண் சம்பந்தமான அனைத்து கோளாறுகளையும் நீக்க வல்லது முருங்கைப்பூ.

கண் பார்வை : நடுத்தர வயதினரை அதிகம் பாதிக்கும் வெள்ளெழுத்து குறைபாடுகளை போக்கும். மேலே குறிப்பிட்ட முருங்கைப்பூ தூளை தேனுடன் சேர்த்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால், வெள்ளெழுத்து குறைபாடுகள் உள்ளிட்ட பார்வைக் கோளாறுகள் சரியாகும். மேலும் குளிர் சீசன்களில் வரும் கண் வியாதிகளையும் சரி செய்யும். இதேபோல மற்றொரு கண் வியாதி நீண்ட நேரங்கள் கணினி முன் அல்லது தொலைக் காட்சி முன் அமர்ந்து இருக்க வேண்டிய நிலையில், கண்களின் இயல்பான தன்மைகள் தடை படுகின்றன. இவர்கள், முருங்கைப்பூக்களை பாலில் கலந்து நன்கு சுண்டக் காய்ச்சி, பனங் கற்கண்டு கலந்து பருகி வர, கண் பார்வைக் குறைபாடுகள் நீங்கும்.

தாம்பத்திய உறவு : இந்த முருங்கைப்பூ பால் தம்பதியர் அன்றாட அலுவலகப் பணிச் சுமைகளினால் உண்டான மன அழுத்தம் காரணமாக உடலும் மனமும் ஈடுபாடில்லாத தன்மையைப் போக்கி, அவர்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டமேற்படும் வண்ணம் செயல் புரியும். தினமும் பருகி வர, அவர்களின் உடலும் மனமும் வலுவாகும்.

ஞாபக சக்தி : இதே செய்முறையில் முருங்கைப்பூ பாலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பருகிவர ஞாபக சக்தி அதிகரித்து குழந்தைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவர். பெரியவர்கள் ஞாபக சக்தி அதிகரிப்பால் அலுவலகப் பணிகளில் சிறந்து விளங்குவர்.

ஹார்மோன் சம நிலையற்ற தன்மை : முருங்கைப்பூக்களை சர்க்கரை பாதிப்பு உள்ளவர்கள் சீரான அளவில் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள பாதிப்பின் தன்மைகள் விலகி உடல் நலம் சீராகும். முருங்கைப்பூவை பாலில் கலந்து, அத்துடன் பனங்கற்கண்டு சேர்த்து தினமும் பருகி வர, ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். ஆற்றல் மிக்கது. உடல் வளர் சிதை மாற்றம் எனும் உடலின் வயது முதிர்வுத் தன்மையை தாமதமாக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் செல்கள் புத்துயிர் பெற்று, உடல் இளமைப்பொலிவாகும். தாய்மார்களின் பால் சுரப்பை சரியாக்கி, ஆண்களின் உயிரணுக்கள் பெருக்கியாகவும் விளங்கும் ஒரு முருங்கைப்பூ உணவு பற்றி, இங்கே பார்ப்போம்

தாய்ப்பால் : முருங்கைப்பூக்களுடன் கடுகு, பூண்டு, வெங்காயம், சில காய்ந்த மிளகாய்கள் சேர்த்து, பொரியல் செய்து சாப்பிட்டுவர, பெண்களின் உடல் வலுவேறி, தாய்ப்பால் பெருக்கும். ஆண்களின் உடலை புத்துணர்வாக்கி, உயிரணுக்களின் தன்மையை அதிகரிக்கும். பொதுவாக, உயர் இரத்த அழுத்தத்தையும் போக்கும் வல்லமை மிக்கது. மேலும் உயிரணு குறைபாடுடைய ஆண்கள் சூடேற்றிய அரைத்த முருங்கைப்பூக்கள் கொண்ட பனங்கற்கண்டு நீரில் சிறிது பால் சேர்த்து சூடாக்கி தினமும் பருகி வர, குறைபாடுகள் நீங்கி, உயிரணுக்கள் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி : நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தருவது முருங்கைப்பூ, இதன் காயவைத்த தூளோ அல்லது பூவோ எடுத்து பாலில் கலந்து பருகிவர, நலன்கள் விரைவில் கிடைக்கும். உடலுக்கு தீமை பயக்கும் கிருமிகளை வெளியேற்றும் ஆற்றல்மிக்கது முருங்கைப்பூ. மேலே குறிப்பிட்டது போல அல்லாமல் பெரும்பாலும், அனைத்து வியாதிகளுக்கும் நிவாரணம் தருவதாகவும், மேலும் நோய்கள் அணுகாவண்ணம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தந்து உடலை வளமாகவும், வலிமையாகவும் மாற்றும் ஆற்றல் கொண்டது, முருங்கைப்பூ. எனவே எந்த ஒரு சிறிய அளவில் ஏற்படும் மேலே சொன்ன உடல் நல பாதிப்புகளுக்கெல்லாம் உடனே மேலை மருத்துவத்தை நாடாமல், அதிகம் செலவு வைக்காத, சித்தர்கள் அருளிய இந்த முருங்கைப்பூ வைத்திய முறைகளின் மூலம் உங்கள் உடல்நிலையை சீராக்குங்கள்! பக்க விளைவுகள் ஏதும் இன்றி, உடலை வளமாக்கும், நம்மை வியாதிகளிலிருந்து காக்கும் முருங்கைப்பூ,drumstickflower 26 1501071749

Related posts

சர்க்கரை அளவை குறைக்கும் கோவைக்காய்

nathan

உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!12 நாடுகளுக்கு பரவிய குரங்கம்மை நோய்:

nathan

உங்களுக்கு தெரியுமா நெஞ்செரிச்சலுக்கு முக்கிய காரணம்

nathan

கூன் விழுவதற்கான காரணிகளும் தடுப்பதற்கான பாதுகாப்பு முறைகளும் : படித்து பாருங்கள்

nathan

கல்யாண முருங்கை இலையில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கா? நம்ப முடியலையே…

nathan

முருங்கை பூவின் மருத்துவ மகிமை

nathan

அந்த விஷயங்களை தோழிகளிடம் பகிர்ந்து கொள்ள விரும்பும் பெண்கள்

nathan

உங்கள் கவனத்துக்கு அடிக்கடி மேல் வயிறு வலி வருகிறதா. ?கண்டிப்பாக வாசியுங்க….

nathan

முருங்கைப்பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

nathan