33.2 C
Chennai
Thursday, May 15, 2025
1524130729 5522
மருத்துவ குறிப்பு

நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட அவுரி

ஆயுர்வேதத்தில், நீலி எனப்படுகிறது. ஆவாரம் செடிகளின் இலைகளைப் போன்றிருக்கும். நமது நாட்டில் இருந்து ஏற்றுமதி ஆகும் மூலிகை வகைகளில், அவுரிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இச்செடியினின்றும் நீலம் எடுக்கப்பட்டு மேல்நாட்டுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

அவுரி, சிறுசெடி வகையை சார்ந்தது, பயிரிடப்படுபவை, புதர் செடிகள் போல அடர்த்தியாக வளர்ந்திருக்கும். இலைகள் ஆழ்ந்த பச்சை நிறமானவை. அவுரி வேர் பட்டையை, கைபிடியளவு எடுத்து, பத்து மிளகு சேர்த்து நான்கு டம்ளர் நீரை, ஒரு டம்ளராக காய்ச்சி, தினம் இரு வேளை பருகி வர, காணாக்கடி, ஒவ்வாமை, தோல் நோய்கள் ஆகியவை தீரும்.

இலையை அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு வெள்ளாட்டுப் பாலில் கலந்து அருந்த கல்லீரல் நோய்கள் தீரும். தினம் ஒரு வேளையாக, மூன்று நாட்கள் அருந்த வேண்டும். இதன் இலையை அரைத்து, தோல் நோய்கள் சிரங்குகளுக்கு பூச குணமாகும்.

இலையை அரைத்து, விளக்கெண்ணெயுடன் கலந்து, சிறு குழந்தைகளின் தொப்புளை சுற்றி தடவ, மலக்கட்டு நீங்கும். அவுரி வேரை நன்றாக அரைத்து, நெல்லிக்காய் அளவு அரை ஆழாக்கு பசுவின் பாலில் கலக்கி, வடிகட்டி, தினம் ஒரு வேளை என, எட்டு நாள் தர, சிலந்தி, எலி முதலியவையின் விஷம் நீங்கும்.1524130729 5522

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு அசைவில்லை என்றால் இப்படிச் செய்திடுங்கள்!

nathan

உங்களுக்கு சும்மா குதிரை மாதிரி பலம் வரணுமா? இந்த சூரணத்த தேன் கலந்து சாப்பிடுங்க

nathan

உங்களுக்கு தெரியுமா பாலுடன் இவற்றையெல்லாம் சேர்த்து சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்தாகி விடுமாம்..!

nathan

பெண்களுக்கு எதனால் எல்லாம் கர்ப்பம் தரிக்காமல் போகலாம்?

nathan

நாட்டு வைத்திய கருத்தரித்த பெண்களுக்கு

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த வழிகள் மூலம் தைராய்டு பிரச்சனையை நீங்கள் இயற்கையாகவே நிர்வகிக்க முடியும்…!

nathan

பெண்கள் தன் கணவனை ஏமாற்றுவதற்கான காரணங்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா மருந்து மாத்திரைகளை எடுக்கும் போது குடிக்கக்கூடாத ஜூஸ்கள்!

nathan

சிகரெட்டால் வரும் நோய்கள்

nathan