28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
25 1511613327 1
ஆரோக்கிய உணவு

உணவில் எதற்காக ஊறுகாய் சேர்க்கப்படுகிறது தெரியுமா ?அப்ப இத படிங்க!

1. உணவில் எதற்காக ஊறுகாய் சேர்க்கப்படுகிறது ? உணவில் நாம் அறுசுவைகள் எனும் இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு மற்றும் உவர்ப்பு. போன்ற சுவைகளை சமச்சீராக சேர்த்து வர, அவை உடலின் ஆற்றல் நிலையை, சமநிலைப்படுத்துகிறது, இதில் பாதிப்பு ஏற்படும்போது, சுவையை உணரும் நரம்புகள், செயல் இழந்து, உணவில் நாட்டம் குறைந்து, பசியின்மை உண்டாகிறது. இதைப் போக்கவே, ஊறுகாய்கள், உணவில் அருமருந்தாகிறது. அதில் நிறைய வகைகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பானவை.

2. “மாதா ஊட்டாததை மாவடு ஊட்டும்” சிறு குழந்தைகளுக்கு அன்னையர் சோறு ஊட்டும்போது, சமயங்களில் குழந்தைகளுக்கு உணவு செரிமானத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு, உணவை வெறுப்பர், அந்த சமயங்களில் உணவில் சிறிது மாவடுத் துண்டைக் கலந்து ஊட்டும்போது, குழந்தைகள் உற்சாகத்துடன் உணவை உண்ண ஆரம்பிப்பர். மாவடுவில் உள்ள துவர்ப்பும், புளிப்பும் கலந்த உவர்ப்பு சுவை, குழந்தைகளின் சுவை நரம்பில் ஈர்ப்பை உண்டாக்கி, உணவை மீண்டும் சாப்பிடக் காரணமாகும்.

3. நாவின் சுவை நரம்பை செயல்பட வைக்கும், அரு நெல்லி!. குழந்தைகளுக்கு ஏற்படும் பசியின்மை போல, பெரியவர்களுக்கும் ஏற்படும், அந்த சமயங்களில் ஆபத்பாந்தவனாக, உதவிக்கு வருவது, அருநெல்லியாகும். அரு நெல்லி ஊறுகாய், சிறிது உணவில் சேர்த்தாலே போதும், அறுசுவையும் கொண்டு விளங்கும் அரு நெல்லி ஊறுகாய், நாவின் சுவை நரம்புகளைத் தூண்டி, அவற்றை பாதிப்பில் இருந்து சரிப்படுத்தி, உணவில் மீண்டும் ஈடுபாடு கொள்ள வைக்கும்.

இத்தகைய சிறப்புகள் பெற்ற ஊறுகாய்கள், உணவில் ஈடுபாடு கொள்ள வைப்பவை மட்டுமல்ல, அவை உணவை செரிமானமடைய வைப்பதில், உணவில் உள்ள நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றுவதில், சிறந்த ஆற்றல் பெற்று திகழ்பவை. ஊறுகாயில் சேர்க்கப்படும் கிருமிகளை அழிக்கும், ஆற்றல் மிக்க மஞ்சள் தூளும், சற்றே கூடுதலாக இடும் உப்பும், நச்சுத் தொற்றுக் கிருமிகளிடம் இருந்து, ஊறுகாயைக் காக்கிறது.

4. ஊறுகாயின் பயன்கள்: பொதுவாக ஊறுகாய்கள், உண்ட உணவை செரிக்க வைப்பதில், சிறப்பானவை. இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, உடலின் வியாதி எதிர்ப்புத் தன்மையை வலுப்படுத்தி, உடலை வியாதிகளிடம் இருந்து பாதுகாப்பவை. இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொழுப்பை சரிப்படுத்தி, உடலில் சர்க்கரை பாதிப்புகள் ஏற்படாத வண்ணம், காக்கும் தன்மை உடையவை. ஊறுகாயில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள், செரிமானத்தை அதிகரித்து, வயிற்றில் சேரும் நச்சுக்களை அழித்து, வெளியேற்றும் வல்லமை பெற்றவை. ஊறுகாயில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் மனிதர்களின் உடலுக்கு பல விதத்தில் நன்மைகள் தரும் விதத்தில் அமைந்தவை.

குறிப்பாக, நெல்லிக்காய் ஊறுகாயில் உள்ள வேதிப் பொருள்கள், கல்லீரல் பாதிப்புகளை குணப்படுத்தக் கூடியவை. உடல் நச்சுக்களை நீக்கி, உடலை வலுப்படுத்தும் தன்மை மிக்கவை.

5. செரிமானத்திற்கு நன்மை : கிடாரங்காயில் உள்ள வேதிப் பொருட்கள் மற்றும் வைட்டமின்கள், உடலில் வியாதி எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து, இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் மிக்கவை. இரத்த சர்க்கரை அளவை சரிசெய்து, உடலில் உள்ள நச்சுக் கொழுப்புகளை, கரைத்து, பித்தத்தைப் போக்கி, உடல் நலனை காக்கும் இயல்புடையவைம கிடாரங்காய் ஊறுகாய்கள். கடைகளில் அதிகம் கிடைக்காத, சில அரிய வகை ஊறுகாய்களை, செய்யும் முறைகளைப் பார்ப்போம்.

கிடாரங்காயில் உள்ள வேதிப் பொருட்கள் மற்றும் வைட்டமின்கள், உடலில் வியாதி எதிர்ப்புத் தன்மையை அதிகரித்து, இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் மிக்கவை. இரத்த சர்க்கரை அளவை சரிசெய்து, உடலில் உள்ள நச்சுக் கொழுப்புகளை, கரைத்து, பித்தத்தைப் போக்கி, உடல் நலனை காக்கும் இயல்புடையவைம கிடாரங்காய் ஊறுகாய்கள். கடைகளில் அதிகம் கிடைக்காத, சில அரிய வகை ஊறுகாய்களை, செய்யும் முறைகளைப் பார்ப்போம்.

மாம்பூக்கள் பூத்து முடிந்ததும் காய்க்கும் மாங்காய்ப் பிஞ்சுகளே, மாவடுக்கள் எனப்படும், உப்பைத் தொட்டுக்கொண்டு, வெறுமனே சாப்பிட, சுவையாக இருக்கும் மாவடுக்கள், ஊறுகாயில் சிறப்பிடம் பெறுபவை. தேவை: இருபது மாவடுக்கள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், வெந்தயத் தூள், கடுகு, உப்பு மற்றும் சிறிது விளக்கெண்ணை. வாணலியில் விளக்கெண்ணை விட்டு, அதில் கடுகு வெடித்ததும், மிளகாய்த் தூள், வெந்தயத்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், கலந்து, பின்னர் இறக்கி, அதில் நன்றாக சுத்தம் செய்த மாவடுக்களை இட்டு, தனியே வைக்கவும்.

மாவடுக்களில் உள்ள நீர், உப்பினால் வெளியேறி, இந்தக் கலவையில் கலந்து, மீண்டும் மாவடுவில் ஏறிவிடும். விளக்கெண்ணையில் விருப்பம் இல்லையெனில், நல்லெண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம். இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்து, தினமும் சற்று நேரம் குலுக்கி விட்டு, அதன் பின் உபயோகிக்க, சுவையில் அசத்தும், இந்த மாவடு ஊறுகாய். சுவை நரம்புகளை இயங்க வைக்கும் அரு நெல்லி ஊறுகாய். அரு நெல்லிக்காய்கள் இருபது அல்லது தேவையான அளவு எடுத்துக்கொண்டு, அவற்றை நன்கு சுத்தம் செய்து, தனியே வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் சிறிது நல்லெண்ணை ஊற்றி, அதில் கடுகு போட்டு வெடித்ததும், அரு நெல்லிக்காய்களை அதில் இட்டு சற்றே வதக்கி, பின்னர் மிளகாய்த் தூள், வெந்தயத் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் இந்துப்பு சேர்த்து, நன்கு கிளறி வரவும். இந்தக் கலவையில் உள்ள அரு நெல்லிக்காயில் உள்ள நீரெல்லாம் நன்கு வற்றி, அவை எண்ணையில் சேரும் வரை நன்கு கிளறி, ஆற வைத்து பத்திரப் படுத்த, சுவை மிக்க, அரு நெல்லி ஊறுகாய் தயார்.

7. மருத்துவ நன்மைகள் அதிகம்: கிடாரங்காயை துண்டுகளாக வெட்டிக் கொண்டு, ஒரு பீங்கான் ஜாடியில், கிடாரங்காய் துண்டுகளை இட்டு, உப்பு, மஞ்சள் தூள் இவற்றைத் தூவி, சில நாட்கள் ஊற வைக்கவும். பின்னர் மிளகாய்த் தூள் கலந்து, கடுகு தாளித்து அந்த எண்ணையுடன் இந்த ஜாடியில் ஊற்றி, பெருங்காயத் தூளை மேலே, தூவி நன்கு கிளறிவிட்டு, பத்திரப் படுத்தவும். சுவையான கிடாரங்காய் ஊறுகாய், நாவிற்கு புது ருசியைத் தரும், உண்ட உணவை, செரிமானமாக்கும்

8. உப்பு கிடாரங்காய் : கிடாரங்காயை ஒரு வளையம் போல, மேல் தோலை, சீவி, அதில் இந்துப்பு சேர்த்து, ஒரு ஜாடியில் இட்டு, வெயிலில் சில நாட்கள் வைத்திருக்க, அதில் உள்ள நீரெல்லாம், ஆவியாகி, உப்பில் ஊறி, நன்கு காய்ந்த கிடாரங்காய், நாவின் சுவை நரம்புகளை செயல்பட வைத்து, நாவிற்கு, புது ருசியை அறிய வைக்கும்.

9. மாங்காய் ஊறுகாய். இஞ்சியின் காரத்தோடு, மாங்காய் போல புளிப்புச் சுவையுடன் விளங்கும், ஒரு இஞ்சி வகைதான், இஞ்சி மாங்காய். இதை தோல் சீவி, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணை சிறிது ஊற்றி, அதில் கடுகு போட்டு தாளித்து, பெருங்காயத் தூள் சேர்த்து, இந்தக் கலவையை, மாங்காய் இஞ்சி வைத்துள்ள பாத்திரத்தில் கலந்து, அத்துடன், இந்துப்பு, மிளகாய்த் தூள் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, நன்கு கிளறி வைக்கவும். ஓரிரு நாட்களில் நன்கு ஊறி, உணவில் தொட்டுச் சாப்பிட சுவையுடன் இருக்கும், இந்த மாங்காய் இஞ்சி ஊறுகாய். ஊறுகாய்க்குத் தேவையான பொடி வகைகளை, ரெடிமேடாகத் தயாரித்து வைத்துக் கொண்டால், விரும்பிய காய்கள் கிடைக்கும் நேரத்தில், உடனே ஊறுகாய் செய்து வைத்துக் கொள்ளலாம்.

10. ஊறுகாயில் சேர்க்கும் தானியங்கள் : வெந்தயம் கடுகு மற்றும் மஞ்சள் இவற்றை வாங்கி, தனித்தனியே நன்கு வெயிலில் காய வைத்து, தூளாக அரைத்து வைத்துக் கொள்ளலாம். மேலும், கட்டிக் பெருங்காயத்தின் மணம் தேவைப் படுபவர்கள், அதை வெயிலில் நன்கு உலர வைத்து, பின்னர் வாணலியில் இட்டு வறுத்து, பொடியாக்கி வைத்துக் கொள்ளலாம். இதுபோல, புளிப்புச் சுவைக்கு, வினிகர், சாஸ் போன்றவற்றைப் பயன்படுத்தாமல், எலுமிச்சைப் பழச்சாற்றைப் பயன்படுத்த, ஊறுகாயில் இயற்கையான சுவையும் மணமும் கிடைக்கும்.

25 1511613327 1

Related posts

சுவையான கேழ்வரகு இடியாப்பம்

nathan

அஜீரண பிரச்சினையை தடுத்து வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்

nathan

தேனை ஏன் சூடு செய்து சாப்பிடக்கூடாது என உங்களுக்கு தெரியுமா?

nathan

கர்ப்பகாலத்தில் பெண்கள் வெண்டைக்காய் சாப்பிடுவது பாதுகாப்பானதா?

nathan

நீங்கள் வாங்கும் கருப்பட்டி ஒரிஜினல்தானா..?

nathan

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிட வேண்டும்?

nathan

இது, எத்தனையோ நோய்களைத் தடுக்கும் ஆற்றல்கொண்டது…

sangika

சூப்பரா பலன் தரும் கிரீன் டீ !

nathan

வாயுத் தொல்லை, உடல் சூட்டை போக்க அருகம்புல் துவையல்….

sangika