ஆரோக்கிய உணவு

சூப்பரான கடலை மாவு வெந்தயக்கீரை ரொட்டி

காலை வேளையில் வீட்டில் உள்ளோருக்கு ஆரோக்கியமான சமையல் செய்து கொடுக்க நினைத்தால், கடலை மாவு மற்றும் வெந்தயக்கீரை கொண்டு செய்யப்படும் ரொட்டியை செய்து கொடுங்கள். இது மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல், சுவையானதும் கூட.

இங்கு அந்த கடலை மாவு வெந்தயக்கீரை ரொட்டியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 கப்

வெந்தயக் கீரை – 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

ஓமம் – 1 டீஸ்பூன்

உப்பு – 1 சிட்டிகை

நெய் – தேவையான அளவு

வெதுவெதுப்பான நீர் – 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் வெந்தயக்கீரை சேர்த்து நன்கு பிசைய வேண்டும்.

பின் அதில் மிளகாய் தூள், ஓமம், உப்பு மற்றும் 2 டீஸ்பூன் நெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ரொட்டி பதத்திற்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், ரொட்டி மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, ரொட்டி போன்று கையால் தட்டி, தோசைக் கல்லில் போட்டு, முன்னும் பின்னும் நெய் ஊற்றி வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் சுட்டு எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான கடலை மாவு வெந்தயக்கீரை ரொட்டி ரெடி!!!

Related posts

சுவையான சிம்பிளான… தேங்காய் சாதம்

nathan

எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்

nathan

உங்களுக்கு தெரியுமா கோடையில் ஆரோக்கியம் தரும் ஆயுர்வேதம்

nathan

காளானை யார் எல்லாம் சாப்பிட கூடாது தெரியுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கேரட் துவையல்

nathan

உங்களுக்கு தெரியுமா காலிஃப்ளவர் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்று ?

nathan

சுவையான திருநெல்வேலி சொதி

nathan

ஆண்களின் உடல் சக்தியை அதிகரிக்க உதவும் ஆறு வகையான தேநீர்!!!

nathan

மருத்துவ குணம் நிறைந்த இஞ்சி தொக்கு!!

nathan