நரை முடி உணவு பழக்கம், மரபணு, பாரம்பரியம் என பல்வேறு காரணங்களால் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், சமீபத்திய ஆய்வொன்றில், நரைமுடிஉண்டாகும் போது மாரடைப்பு அல்லது நரைமுடி உண்டாவது மாரடைப்பின் அறிகுறியாக கூட இருக்கலாம் என கூறியுள்ளனர். அந்த ஆய்வறிக்கை பற்றி இங்கு காணலாம்…
எகிப்து ஆய்வு! எகிப்தில் இருக்கும் கெய்ரோ எனும் பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் முடிவுகளில் தான் இந்த நரை முடி, மாரடைப்பு மத்தியில் இருக்கும் தொடர்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நரைமுடி! ஒருவருடைய தலை முடியில் நரை எட்டிப்பார்க்கும் போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என இந்த ஆய்வின் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மரபணு! உடலில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாமை போவது, மரபணு தாக்கம், புகை, மது, ஹார்மோன் மாற்றங்கள், பரம்பரை தாக்கம் போன்றவற்றால் உடலில் உள்ள செல்களின் செயல் இயக்கத்தில் எதிர்மறை தாக்கம் நிகழ்கிறது.
பாதிப்பு! இவற்றால் தலை முடியிலும் பாதிப்பு உண்டாகிறது. முக்கியமாக தலை முடியில் நரை உண்டாகிறது. இந்த அறிகுறிகள் தென்படும் போது, இதயத்தில் இரத்த அழுத்தம் அல்லது இரத்த குறைபாடு போன்ற பாதிப்புகள் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.
மாரடைப்பு! எனவே, இதன் விளைவாக நரை முடி ஏற்படும் போது, இவற்றில் ஏதேனும் ஒன்றின் காரணத்தால் மாரடைப்பு உண்டாக வாய்ப்புகள் உண்டு என கெய்ரோ பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.