30.1 C
Chennai
Monday, Apr 21, 2025
dryhair 1638269292
தலைமுடி சிகிச்சை

கூந்தலுக்கு அழகுடன் வைத்துகொள்ள வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்

கூந்தலுக்கு அழகுடன் வைத்து கொள்வது பெண்களுடைய பெரிய கனவாகும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் பலர் கூந்தல் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.

முடியின் வேர்கால் பலவீனப்படுவதாலும் இராசயனம் பொருட்கள்படுவதாலும் முடி அதிகம் கொட்டுகின்றது.

இதற்காக பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அரிசி ஊறவைத்த நீரே போதுமானது. தற்போது இதனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

முடி உடைவது, முடி மெலிவதை குறைக்க

அகன்ற பாத்திரத்தில் இரண்டு கப் நீர் ஊற்றி அதில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அரிசியை வடிகட்டிவிட்டு அந்த நீரை மட்டும் பிரிட்ஜில் குளிர வைக்கவும்.

ஒரு வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சியில் அரைத்துக்கொள்ளவும். அதனை வடிகட்டி சாறு எடுத்துக்கொள்ளவும். பின்பு அரிசி ஊறவைத்த நீரில் வெங்காய சாற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்பு உச்சந்தலை உள்பட தலை முழுவதும் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விடலாம். வெங்காய வாசனையை போக்குவதற்கு ஷாம்பு பயன்படுத்திக்கொள்ளலாம்.

உச்சந்தலையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க

அரிசியை ஊறவைத்து ஒரு கப் நீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். அதனுடன் ஒரு கிரீன் டீ பேக்கை போட்டு நன்கு காய்ச்சி வடிகட்டிக்கொள்ளவும்.

பின்பு அதனுடன் அரிசி நீரை சேர்க்கவும். இந்த கலவையை உச்சந்தலையில் தடவி மசாஜ் செய்யவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவி விடலாம்.

கூந்தல் முடியை மென்மையாக்க

இரண்டு கப் நீரில் ஒரு கப் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். பின்பு அரிசி நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி சூடுபடுத்தவும். சூடானதும் அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து நன்கு கிளறவும்.

சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் நன்றாக கொதிக்கவைத்து கிளறிவிடவும். பின்பு இந்த கலவையை வடிகட்டி வைத்துக்கொள்ளவும். ஆறியதும் தலை முடியின் மயிர்க்கால்களில் அழுத்தமாக தடவி மசாஜ் செய்து வரவும். நீரை சூடான நிலையில் பயன்படுத்தக்கூடாது.

வெது வெதுப்பான நீரை உபயோகிப்பது நல்லது. அது உச்சந்தலையில் உள்ள துளைகளை திறக்கவும் உதவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை கழுவி விடலாம்.

நீண்ட மற்றும் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு

அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் அரிசியுடன் மூன்று கப் தண்ணீர் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தண்ணீரை வடிகட்டி ஜாடியில் ஊற்றி வைத்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் ஆரஞ்சு பழ தோலை சேர்க்கவும்.

ஜாடியை சூரிய ஒளி படாத இடத்திலோ, குளிர்ச்சியான இடத்திலோ வைத்துக்கொள்ளவும். இந்த நீர் கலவையை உச்சந் தலையில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வருவதன் மூலம் நல்ல மாற்றத்தை உணரலாம்.

Related posts

உங்க நரை முடியை மீண்டும் கருகருன்னு மாத்த…சூப்பர் டிப்ஸ்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… குறைந்த வயதில் தலைமுடி உதிர்ந்து வழுக்கை விழ இதான் காரணம்!

nathan

பெண்களே கொரோனா தொற்றுக்குப் பிறகு அதிகமாக முடி உதிர்கிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? அப்ப இத படிங்க!…

nathan

தூங்கும்போது செய்யும் தவறுகள் கூந்தல் உதிர்வை அதிகரிக்கும்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தலைமுடிக்கு ஷாம்புவை பயன்படுத்தும்போது நீங்க செய்யும் தவறுகள் என்னென்ன தெரியுமா?

nathan

அழகான கூந்தலுக்கு அரோமா தெரபி

nathan

podugu poga tips in tamil – பொடுகு நீங்க சிறந்த வழிகள்

nathan

எலி வால் போல கூந்தல் அசிங்கமா இருக்க? அப்ப இத செய்யுங்க ….

nathan