28.5 C
Chennai
Sunday, May 18, 2025
201804051020531786 1 mothermilk. L styvpf
ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

அதிக நாட்கள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு கிடைக்கும் பலன்களை பற்றி பார்க்கலாம்.

குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். 201804051020531786 1 mothermilk. L styvpf

குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான்.

அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர வளர நோயின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ மூலதாரமாக உள்ளது. எனவே தாய்மார்கள் தவறாமல் குறைந்தது 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

இங்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். குழந்தைகளுக்கு குறைந்தது ஆறு மாதங்கள் தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு சுவாசக்குழாயில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

குழந்தையின் சுவாசக்குழாயானது மிகவும் மென்மையாக இருப்பதால், அவர்களுக்கு ஆறு மாதத்திற்கு முன் மற்ற உணவுப் பொருட்களை கொடுப்பதால், பிரச்சனைகள் ஏற்படக்கூடும். தாய்ப்பாலானது குழந்தைக்கு வேண்டிய அடிப்படை ஊட்டச்சத்துக்களை கொடுப்பதால், அவற்றை குறைந்தது ஆறு மாதங்களாவது கொடுக்க வேண்டும்.

ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள் மற்றும் இதர சத்துக்கள் எண்ணற்ற அளவில் உள்ளது. மேலும் குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருளும் அதிகம் உள்ளது. ஆறு மாதத்திற்குட்ட குழந்தைகளை நோய்களானது எளிதில் தொற்றிக் கொள்ளும்.

ஆகவே அவர்களுக்கு 6 மாதத்திற்கு மேல் தாய்ப்பால் கொடுத்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தியினால் நோய்கள் அண்டாமல் தடுக்கலாம். குறிப்பாக சளி பிடிப்பது, காது மற்றும் தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

குழந்தைக்கு ஆறு மாத காலத்திற்கு முன்பே தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தி, மாட்டுப்பால் அல்லது சோயா பால் கொடுக்க ஆரம்பித்து, பின் திட உணவுப் பொருட்களைக் கொடுத்தால், சில சமயங்களில் அழற்சியை ஏற்படுத்தும்.

ஆனால் அவர்களுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுத்து வந்தால், அவர்களின் வயிற்றில் ஒரு லேயரானது உருவாகி, அவர்களுக்கு திட உணவுகள் கொடுக்கும் போது எவ்வித பிரச்சனைகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளும்.

Related posts

இறுதி நாட்களில் மட்டுமே வெளிப்படுத்தும் கொடூரமான நோய்கள்

sangika

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

இந்த உடற்பயிற்சி உத்திகளை பின்பற்றி கொழுப்பை குறைக்கலாம்…..

sangika

பெண்கள் இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ஏற்படும் பிரச்சனைகள்

nathan

கண்ணீர் வராமல் வெங்காயம் வெட்ட ஆசையா…?

nathan

கண்டிப்பா கவனியுங்க..! எலுமிச்சை பழத்தோலை தூக்கிவீசுபவரா நீங்க..?

nathan

த‌யி‌ரி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்

nathan

மாதவிடாய் தாமதமாக வருவதற்கான 5 காரணங்கள்

nathan

ஆரோக்கியத்தை மேம்படுத்த வெந்தய டீ ….

sangika