27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
stomach cramps 759
ஆரோக்கியம்பெண்கள் மருத்துவம்

ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

மாதவிடாய்க்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதன் விகிதம் சரியாக இருக்க வேண்டும். மற்றவை பற்றி பேசும் முன்பு ஒரு விஷயம். அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஹார்மோனை ரெகுலரைஸ் செய்ய, ஆளி விதைகள் மற்றும் சோம்பினை சரிவிகிதத்தில் எடுத்து, அதில் சிறிது ஓம நீரினை விட்டு, உண்ணலாம்.

stomach cramps 759

ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், நமது உடலிலும் கர்ப்பப்பையிலும்இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது. அதனால், அடுத்த மாதவிடாய்க்கு தேவையான எண்டோமெட்ரியம் ஃபார்மேஷன் சரியாக நடக்கும்.

எள்ளுருண்டை சாப்பிடலாம். அதிலும், கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.

கற்றாழையை, தேங்காய்ப் பால், பனங்கற்கண்டு, ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டால், கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும், ஓவேரியன் ஸ்ட்ரெஸ் லெவலையும் சரிசெய்யும்.

ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம். அதில், விட்டமின் சி இருப்பதால், அயர்ன் அப்சார்ப்ஷனுக்கு உதவும். வெறுமனே அயர்ன் அதிகமாக இருக்கும் உணவினை எடுத்துக்கொள்வதாலே உடம்பில் இரும்புச் சத்து அதிகமாகிவிடாது. விட்டமின் சி உணவுதான் அப்சார்ப்ஷனைக் கொடுக்கும். எனவே, நெல்லிக்கனி அவசியம்.

நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். ஆனால், கடைகளில் விற்கும் நெல்லிக்காய் கேண்டியை வாங்கிச் சாப்பிடாதீர்கள். முதல்நாள் தேனில் ஊறவைக்க வாய்ப்பு கிடைக்காவிட்டால், அரை லிட்டர் பாட்டிலில், ஒன்றரை நெல்லியை வெட்டிப்போடுங்கள். மீண்டும் மீண்டும் அதில் நீரை நிரப்பி, மாலை வரை அந்த நீரை அருந்தலாம். மாலை ஐந்து மணிக்கு மேல் அதனை அருந்த வேண்டாம்.

வெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபலிசம் நட்த்தும் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்யப் பயன்படும்.

பீரியட்ஸ் சரியாக வரவில்லை என்றால், அவர்களுக்கு ஆண்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் லெவல் அதிகமாக இருக்கும். இதனால், முகத்தில் தேவையில்லாத ரோமங்கள் தோன்றும். சோம்பு மற்றும் ஆளி விதையை எடுத்துக்கொள்வதன் மூலம், ஆண்ட்ரோஜன் அளவு சரிசெய்யப்பட்டு, இந்த தேவையில்லாத ரோமங்கள் வருவதைத் தவிர்க்கலாம்.

மாதுளைப்பழமே நம் கர்ப்பப்பை வடிவத்தில்தான் இருக்கும். அது, பீரியட்ஸை ரெகுலரைஸ் செய்ய பெரிய அளவில் உதவும். பீட்ரூட் மற்றும் கேரட்டை இணைத்து, சாப்பிடலாம்.

சிலருக்கு பீரியட்ஸ் மூன்று-நான்கு மாதங்கள் கழித்து வரும் போது, இயல்பிற்கு மீறியதாக ஏழு நாள்களுக்கு மேல் கூட அதிக ஃப்ளோ இருக்கும். கட்டிகட்டியாக இரத்தப்போக்கு இருக்கும். அவர்கள்,கருஞ்சீரகம் சாப்பிட வேண்டாம். அவர்கள் வாழைப்பூவை வறுத்து தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம். பொட்டுக்கடலையை நெய்யுடன் வறுத்து, உலர்ந்த திராட்சையுடன் எடுத்துக்கொண்டால், அது அதிகப்படியான ஃப்ளோவினை சரி செய்யும்.

ஆனால், சீரற்ற மாதவிடாய் இருப்பவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக கருஞ்சீரகத்தை எடுத்துக்கொண்டு வந்தால், அந்தப் பிரச்சனையை சரி செய்யும்.

அடுத்ததாக, சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான ஃப்ளோ இருக்காது. இதனைத் தவிர்க்க இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும். பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி,மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம்.

இவை தவிர, ஹார்மோன் சுரப்பினை சரிசெய்யவும், மன அழுத்தத்தினை சரிசெய்யவும், வக்ராசனம், சக்திபந்தாசனம், நாடிசுத்தி ப்ராணயாமா போன்ற சில ஆசனங்கள் இருக்கின்றன. இவற்றைத் தகுந்த பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் செய்யும் போது, மனஅழுத்தம், உடல் எடை, ஹார்மோன் சம்மற்றத் தன்மையை சரி செய்து மாதவிடாய் பிரச்சனையும் எந்தவித பக்கவிளைவும் இல்லாமல், சரி செய்ய முடியும். சரியான உணவையும், உடற்பயிற்சியையும் செய்வதன் மூலம், மாதவிடாய் பிரச்சனையை சரிசெய்யலாம்.

Related posts

சோளநாரில் உள்ள நன்மைகள் உங்களுக்கு தெரியுமா!……

sangika

தூதுவளையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்திவர கிடைக்கும் நன்மைகளை பாருங்கள்…

sangika

சிக்கென்ற இடை தரும் சில யோகாசனங்கள்(beauty tips in tamil)

nathan

கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேவையான சத்துள்ள உணவுவகைகள்

nathan

இளமையைப் பராமரிக்க இதை செய்யுங்கள்!….

sangika

ரோஜாவின் 5 மருத்துவ குணங்கள்!

nathan

அதிக உடற்பயிற்சிகளில் ஈடுபடுகிறீர்களா? கட்டாயம் இத படிங்க!….

sangika

குழந்தையின் ஆரோக்கியமும் வளர்ச்சியும் சிறப்பாக இருக்க இத செய்யுங்கள்!…

sangika

கர்ப்பம் தரிக்காமல் இருப்பதற்கு பல உடல் நலப்பிரச்னைகளும் உண்டு……

sangika