29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா சத்தான டிபன் ராகி உப்புமா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 1 கப்

கடுகு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு – 1/2 டீஸ்பூன்

உளுந்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 1

தக்காளி – 1

கறிவேப்பிலை – சிறிது

கொத்தமல்லி – சிறிது

உப்பு – தேவையான அளவு

தண்ணீர் – 2 கப்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ராகி மாவை போட்டு நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகத்தை போட்டு தாளித்த, பின் கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்பு அதில் கறிவேப்பிலை, வெங்காயம், ப.மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு மென்மையாக வதக்க வேண்டும்.

பிறகு அதில் தண்ணீர் ஊற்றி, மெதுவாக ராகி மாவை சேர்த்து தொடர்ந்து கைவிடாமல் கிளறி விட்டு, மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில் தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது முற்றிலும் வற்றியதும், அதனை இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால் ராகி உப்புமா ரெடி!!!

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Related posts

பாதாமும்.. பக்க விளைவுகளும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

கொத்தமல்லியை நீரிழிவு நோயாளிகள் பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும்!

nathan

ஓட்ஸ் டயட் இட்லி : செய்முறைகளுடன்…!

nathan

பச்சை மிளகாயை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

nathan

Food Poison ஆயிடுச்சா? இதோ எளிய நிவாரணம்! இயற்கை வைத்தியம் இருக்கு!

nathan

உடலை ஸ்லிம்மாக வைத்துக் கொள்ளும் மிளகாய்-தேன் ஃப்ரூட் சாலட் செய்வது எப்படி !!

nathan

இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்

sangika

உடலுக்கு ஆரோக்கியமானது முட்டையின் வெள்ளை கருவா? மஞ்சள் கருவா?

nathan

மருத்துவ குறிப்புகள்

nathan