பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டாவை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 200 கிராம்,
உப்பு – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்
ஸ்டஃபிங் செய்ய :
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
சிறிய வெங்காயம் – 2,
இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
உருளைக்கிழங்கு – 1 (சிறியது),
பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை கொத்தமல்லி – சிறிதளவு,
கேரட், முட்டைகோஸ் – கைப்பிடி அளவு,
தக்காளி, பச்சை மிளகாய் – 2.
ஸ்பைசி பொடி:
[பாட்டி மசாலா] மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] தனியா தூள்- ஒரு டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
[பாட்டி மசாலா] சீரகப் பொடி – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை :
கோதுமை மாவை உப்பு, எண்ணெய் சேர்த்துப் சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வெங்காயம், தக்காளி, காய்கறிகள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி-பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, பட்டாணி, கேரட், முட்டைக் கோஸ், பச்சை கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகாய்த்தூள், [பாட்டி மசாலா] கரம் மசாலாத்தூள், [பாட்டி மசாலா] தனியா தூள், [பாட்டி மசாலா] சீரகப் பொடி, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள், [பாட்டி மசாலா] சீரகப் பொடியை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.
இதை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தி மாவைத் திரட்டி அதனுள் வைத்து ஓரங்களை மடித்து, மசாலா காய்கறி உருண்டை வெளியே தெரியாதபடி மூடி விடவும். மீண்டும் லேசாக (ஜென்டில் ப்ரஷர்) சப்பாத்திகளாகத் திரட்டி வைக்கவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு சுற்றி நெய்/எண்ணெய் விட்டு ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு எடுக்கவும்.
சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா ரெடி.