32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

செய்முறைகளுடன் ஜிஞ்சர் சிக்கன்

தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் – கால் கிலோ
வெங்காயம் – 2
இஞ்சி – பெரிய துண்டு
தக்காளி – 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
தனியா தூள் – 1 டீஸ்பூன்
எலுமிச்சை பழம் – 1
புளித்த தயிர் – சிறிதளவு
கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெண், உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
தக்காளி, வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

கடாயை அடுப்பில்வைத்து சூடானதும வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், தனியா தூள்,மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும்.

அதனுடன் சிக்கனை சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் தக்காளி, தயிர் சேர்த்து கிளறி விடவும்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக விட வேண்டும்.

இறுதியில் கரம்மசாலா தூள், எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி பரிமாறவும்.

Related posts

ஆறிப்போன சுடுநீரை சூடுபடுத்தி குடிக்கலாமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

ஜவ்வரிசிக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?

nathan

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

nathan

உங்களுக்கு தெரியுமா காலையில் சீரகத் தண்ணீரை குடித்தால் இவ்வளவு நன்மையா..?

nathan

வாரத்திற்கு இருமுறை கட்டாயம் ப்ரோக்கோலி சாப்பிடுங்க

nathan

தெரிஞ்சிக்கங்க…அல்சர் இருப்பவர்கள் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!!

nathan

`அவிச்ச முட்டை, ஆம்லெட் இதுல எது நல்லது?’… முட்டை குறித்த சந்தேகங்கள்

nathan

இந்த மாதிரியான உணவுகளை பச்சையாக சாப்பிடக் கூடாதாம்!…

sangika