29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
14 1510645909 13
ஆரோக்கிய உணவு

உங்கள் உடலில் மிக அதிக நஞ்சை உருவாக்கும் 6 தினசரி உணவுகள்!! -அப்ப இத படிங்க!

நமது உடல் தினமும் ஆயிரக்கணக்கான நச்சுக்களை உறிஞ்சுகிறது. எங்கிருந்து தெரியுமா? நீங்கள் சாப்பிடும் உணவுகளில் இருந்துதான். நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்த ரசாயனம், ஜீரணத்தபின் உருவான கழிவுகள், சாப்பிடும் மாத்திரைகள் எல்லாம் சேர்ந்து நமது உடலில் நச்சுத்தன்மையாக மாறி நமக்கே ஆப்பு வைக்கும்.

அதனால்தான் தினமும் காலைக் கடனை முடிக்க வேண்டும், நீர் தேவையான அளவு குடிக்க வேண்டும் என மருத்துவர்களும் , அனுபவஸ்தர்களும் மாய்ந்து மாய்ந்து கூறுகின்றனர். இவ்வாறு செய்யும்போது கழிவுகளும், நச்சுக்களும் முழுதாய் அகற்றப்படும். செல்களும் புதிதாய் சுவாசித்து நமது ஆரோக்கியத்தை குறையாமல் பாதுகாக்கும்.

ஆனால் சில சமயம் நாம் சாப்பிட்டும் குறிப்பிட்ட உணவுகள் அதிக நஞ்சை நமது உடலில் விளைவிக்கும். அவற்றின் இயற்கைத் தன்மையே அப்படித்தான். அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிடவே கூடாது என்று சொல்லவில்லை. அளவாக சாப்பிட வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அப்படியே அவற்றை சாப்பிட்டாலும் நன்றாக நீர் அல்லது பழச் சாறுகளை அருந்துதல் அவசியம். அவ்வாறான உணவுகளின் பட்டியலை இந்த கட்டுரையில் காணலாம்.

நஞ்சு அதிகமானால் என்னாகும்? நச்சுக்கள் அதிகமானால் உங்கள் குடலிலேயே தங்கிக் கொள்ளும். உங்களின் ஆரோக்கியமான திசுக்களை பாதிக்கும். உடல் பருமனை வேகமாக அதிகரிக்கச் செய்யும். கழிவுகளும் உடலிலேயே தங்கி கிருமிகள் பெருகி, சர்க்கரை வியாதி முதல் புற்று நோய் வரை பலவித மோசமான உடல் நோய்களை உருவாக்கும்.

மீன் : மீன் நல்லதுதான். அதிக புரதம் கொண்டதுதான். மீன்வகைகளில் மிகவும் சத்தாக கருதப்படும் டுனா வகை மீன்களில் அதிக மெர்குரி இருக்கிறது தெரியுமா? அதிகமாக அடிக்கடி இந்த மீனை சாப்பிட்டால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படலாம்.

பால் : உண்மைதாங்க. பாலும் கூடத்தான். பாலை நேரடியாக நாம் மாட்டிலிருந்து பெறப்படுவதில்லை. பதப்படுத்திய பாலில் அதிகப்படியான டைஆக்ஸின், ஆன்டிபயாடிக், மற்றும் 60 ஹார்மோன்களின் பண்புகள் உள்ளன என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். இவை புற்று நோயை உண்டாக்கும் வல்லமை கொண்டது.

இறைச்சி : இறைச்சி மிக அதிகமாக நச்சுக்கள் கொண்டிருக்கின்றன. அதில் சேர்க்கப்படும் எல்பென்ஜோபைரின் புற்று நோய் பண்புகளை கொண்டிருக்கிறதாம். இவை வயிற்றுப் புற்று நோய் மற்றும் சரும புற்று நோயை உண்டாக்குகின்றன.

சோளம் : சோளத்தில் அதிக மெர்குரி இருக்கின்றன. சோளத்தை சரியன நேரத்தில் அறுவடை செய்து நன்ரக காய வைக்காமல் போனால், அவை அஃப்லாடாக்ஸினுடன் கலந்து நச்சை விளைவிக்கின்றது. இவை உடல் சோகை, சத்தின்மையை உண்டாக்கும்.

சீஸ் : பால் போலவே சீஸ் ,போன்ற பால் சார்ந்த பொருட்களும் நச்சை தூண்டுகின்றன. கடைகளில் வாங்கும் சீஸ் மற்றும் பனீர் போன்றவைகள் பலவித பதப்படுத்துதலுக்கு ஆளான பின் உண்டாவதால் இந்த பாதிப்பு உண்டாகிறதாம்.

முட்டை : முட்டை நல்லது என காலங்காலமாக நாம் நினைத்தாலும் உண்மையில் நமது காலம் அந்த வாக்கியத்தை மாற்றிவிட்டது எனக் கூறலாம். நல்ல நிறம் மற்றும் பெரிதாக காணப்பட ஏற்றும் ஸ்டீராய்டு ஹார்மோன்களால் இன்று முட்டையும் நஞ்சாக மாறிப் போய் விட்டது. வெள்ளை முட்டையை அறவே தவிருங்கள்.

பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் : மிகவும் மோசமாக நஞ்சை அதிக அளவில் ஏற்படுத்துவதில் இந்த மாதிரி பதப்படுத்தி நீண்ட நாட்கள் பயன்படுத்தும்படி தயாரிக்கப்பட்ட உணவுகளுக்கு உண்டு. அவற்றால் சர்க்கரை வியாதி, கல்லீரல் பாதிப்பு இன்னும் பலப்பல மோசமான வியாதிகளை உருவாக்கும்.

ரெடிமிக்ஸ் உணவுகள் : இப்போ எலுமிச்சை உணவு வேண்டுமா? தக்காளி உணவு வேண்டுமா? உடனெ இந்த பாக்கெட் வாங்கி வா! சில நிமிடங்களில் தயார். காய்கறிகள் வேண்டாம். எண்ணெய் வேண்டாம் , முக்கியமாய் மெனக்கெட வேண்டாம் என பலரும் இவற்றை வாங்கி உபயோகிக்கிறார்கள். ஆனால் உண்மையில் அவற்றை அப்படியே வாசனை மற்றும் சுவை நீண்ட நாட்கள் இருப்பதற்கு பயன்படுத்தும் ரசாயானங்களால் உங்கள் குடல்கள் மிக மோசமான நிலையை எட்டும் என்பது தெரியுமா?

இந்த மற்ற பொருட்களும் அப்படித்தான் : ஆப்பிள், வெங்காயம், திராட்சை போன்ற உணவுகளிலும் நச்சுக்கள் அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதிகம் சாப்பிடுதலை தவிர்க்கவும் : எந்த உணவுகளாக இருந்தாலும் அதிகமாக சாப்பிடால் நஞ்சாகத்தான் மாறும். அதான் அன்றைக்கே நம் அறிவாளிகள் சொன்னார்கள், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென. ஏனென்றால் அதிகம் சாப்பிடும்போது வெளிப்படும் நச்சுக்களை வெளியேற்ற நமது குடல்கள் சிரமப்படும். இதனால் நச்சுக்கள் உடலிலெயே டஹ்ங்கி பாய்சனாக மாறிவிடும்.

உப்பு : உப்பு சிறு நீரகங்களை பதம் பார்க்கும். ஆகவெ எப்போதும் நீங்கள் சேர்த்துக் கொள்ளும் உப்பை விட ஒரு ஸ்பூன் கம்மியாக போட்டு பழக்கபடுத்திக் கொண்டால் உப்பின் தேவையை தனிச்சையாக குறைத்துக் கொள்வீர்கள்.

மலச்சிக்கலும் காரணம் : உங்கள் உடலில் நச்சுக்கள் அதிகமாவதற்கு மலச்சிக்கலும் காரணமாகும். வீணான கழிவுகளை வீட்டிலேயே போட்டு வைத்திருந்தால் என்னாகும். கொசுக்கள் உருவாகி, நாற்றமெடுத்து வீட்டின் சூழ் நிலையையே பாதிக்கும்தானே. அவ்வாறுதான் உங்கள் உடலுக்குள்ளும். கழிவுகள் தங்கி கிருமிகள் பெருகி நோய்களை வரவழைக்கும் போதாதற்கு நச்சுக்கள் உருவாகி மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும்.

நச்சுக்கள் உருவாகிவிட்டது! எப்படி வெளியேற்றுவது? கண்ட உணவுகள் அல்லது அளவுக்கு அதிகமாக உணவுகளை சாப்பிட்டாயிற்று. உருவான நச்சுக்களை எப்படி வெளியேற்றுவது? அதற்கு வழிகளும் நமது இயற்கை உருவாக்கியுள்ளது. எப்படி நச்சுக்களை வெளியேற்றலாம் என பார்க்கலாம்.

வேலை : இழுத்துப் போட்டு வியர்க்கும் அளவிற்கு வேலை , அல்லது உடற்பயிற்சி செய்தல் என இரண்டுமே மிகச் சிறந்த முறையில் நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிகிறது. இதைவிட வேறு எந்த முயற்சியும் அந்த அளவிற்கு பலன் தராது.

நீர் : நீரை மருந்து போல் நினைத்து குடித்துக் கொண்டேயிருங்கள். உங்கள் சிறு நீரகத்தில் மற்றும் கல்லீரலில்தான் முக்கால்வாசி நச்சுக்கள் கூடாரம் போட்டிருக்கும். அவற்றை அழிப்பதற்கு சிறந்த உபகரணம் நீர்தான். நீர் மட்டும்தான்.

விரதம் : ஆமாம் ..பலரும் சொன்னதுதான்.. ஆனால் மிகவும் உண்மை. வாரம் ஒரு நாள் நீங்கள் விரதம் இருக்கும்போது கல்லீரலுக்கு வேலை இருக்காது. அந்த சமயத்தில்இரைப்பை நச்சுக்களை வெளியேற்றும் வேலையை செய்கிறது

தூக்கம் : சரியான தூக்கம் இல்லையென்றால் உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறாது தெரியுமா? அதனால்தான் அரைகுறை தூக்கம் தூங்குபவர்கள் உடல் பருமனாகிப் போகிறார்கள். குறைந்தது 7 மணி நேரம் தூங்கும்போது கல்லீரல் மற்றும் மூளை விழித்தியோருந்து நிதானமாக நச்சுக்களை வெளியேற்றுகிறது.

அடிக்கடி மாத்திரைகள் : நீங்கள் ஒரு நாள் சாப்பிடும் மாத்திரை பல நாட்கள் வரை நச்சை வைத்திருக்கும் என அறிவீர்களா? ஆகவே கூடிய மட்டும் எதற்கெடுத்தாலும் மாத்திரை சாப்பிடுவதை தவிருங்கள். இதனால் உடலில் சிறு நீரக கோளாறுகளை தடுக்க இயலும்.

சிட்ரஸ் பழங்கள் : சிட்ரஸ் பழங்கள் உங்கள் உடலில் ஏற்படும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டவை. ஆகவெ வாரம் தவறாமல் எலுமிச்சை, ஆரஞ்சு என சிட்ரஸ் நிறைந்த பழச் சாறுகள் அருந்தலாம்.14 1510645909 13

 

Related posts

உங்களுக்கு ஒரே வாரத்தில் இரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க…தயிருடன் மறந்தும் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடாதீங்க!

nathan

செரிமானத்தை எளிதாக்கும் 8 உணவுகள்..!

nathan

சூப்பரான குடைமிளகாய் புலாவ்

nathan

வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? சாப்பிட, தவிர்க்க வேண்டிய 10 உணவுகள்..!

nathan

திராட்சை இந்த பொருட்களுடன் கலந்து பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான சேமியா வெஜிடபிள் உப்புமா

nathan

‘கருப்பு கசகசா’ தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்

nathan

உளுந்து சப்பாத்தி

nathan