26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
23 1508751409 8
ஆரோக்கிய உணவு

நீங்கள் உடல் எடையை விரைவாக குறைக்க இந்த பழங்களை சாப்பிடுங்க!

உடல் எடையை குறைப்பது தான் இன்றைக்கு பலரது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு என எல்லாவற்றையும் தாண்டி நீங்கள் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவு அதிக புரோட்டீன் சத்து கொண்ட அதே நேரத்தில் குறைவான கொழுப்புச் சத்து கொண்ட உணவாக இருக்க வேண்டும்.
நமக்கு தேவையான கலோரிகள் போக மீதமிருக்கும் கலோரிகள் கொழுப்பாக மாறிடுகின்றன. அந்த கலோரியை எரிக்க போதுமான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாறாக தொடர்ந்து இப்படி கலோரி சேரும் பட்சத்தில் அவை கொழுப்பாக மாறி உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.

இதனை தவிர்க்க நீங்க என்ன உணவு சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

உண்ணும் முறை : காலை உணவோ மதிய உணவோ அல்லது ஸ்நாக்ஸ் சாப்பிட்டாலும் சரி, உணவை நன்றாக மென்று கூழாக்கி சாப்பிடுங்கள். அவசர அவசரமாக முழுங்கவே கூடாது. நிதானமாக மென்று சாப்பிட்டால் தான் உணவில் இருக்கும் சத்துக்கள் நம்மால் கிரகத்துக் கொள்ள முடியும். அதே போல வேறு சிந்தனையுடனோ அல்லது அதிக கோபம், எரிச்சல் போன்ற உணர்வுகளுடன் சாப்பிடச் செல்லாதீர்கள். இது கட்டுப்பாட்டை மீறி அதிகளவில் சாப்பிட வைக்கும்.

தவிர்க்க : வாழைப்பூ, வாழைத்தண்டு, வெண்டைக்காய் ஆகியவற்றை உண்பது உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு நல்லது. நீர்ச்சத்து நிறைந்த பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றைச் சாப்பிடலாம். மைதா, கிழங்கு, எண்ணெயில் பொரித்த உணவுகள், மா, பலா, வாழைப்பழம், இனிப்பு, உப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பழங்கள் : பழங்களில் அதிகளவு கலோரிகள் இருக்கும் ஆனால் கொழுப்பு இருக்காது. அதோடு அவை எளிதில் ஜீரணமாகக்கூடியதும் கூட உடல் எடையை குறைக்க நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய பழங்கள் என்னென்ன என்று தெரியுமா? இதனை பழமாக அப்படியே சாப்பிடுவது தான் நல்லது, சாறாக எடுத்துக் குடிக்காதீர்கள்.

அவகோடா : அவகோடா பழத்தில் நல்ல கொழுப்பு அதிகமிருக்கிறது. அதோ இதில் அதிகளவு தண்ணீர் சத்தும் ஒலிக் அமிலமும் கலந்திருக்கிறது இதனை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் சுரக்க உதவிடும். இந்த ஹார்மோன் கொழுப்பை கரைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

தர்பூசணி : தர்பூசணியில் தண்ணீர் சத்து மட்டுமே நிறைந்திருக்கிறது. அதோடு ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்களை அதிகரிப்பதோடு தசைகளை வலிமையாக்குகிறது. இதில் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

பேரிக்காய் : பேரிக்காய் எடுத்துக் கொண்டால் செரிமானத்தை சீராக்கும். அதோடு மலச்சிக்கல் மற்றும் பசியின்மைக்கு தீர்வாக அமைந்திடுகிறது. சரியாக உணவு சாப்பிட முடியவில்லை என்று ஸ்நாக்ஸ் எடுத்துக் கொள்வது குறையும் அதே சமயம் ஜீரணமாகாத உணவு வகைகளினால் தான் உடல் எடை அதிகரிக்கிறது.

தொப்பை : உடல் எடையை விட இன்னொரு மிக முக்கியப் பிரச்சனை என்றால் அது தொப்பை தான். பலருக்கும் நீண்ட நேரம் உட்கார்ந்த இடத்தில் வேலை பார்க்க வேண்டிய சூழல், அதே சமயம் உடல் உழைப்பும் இல்லாததால் தொப்பை வந்து விடுகிறது. தொப்பையை குறைக்கும் மிக முக்கியமான பழம் எது தெரியுமா? பீச் பழம். தொப்பையை குறைக்க வேண்டும் என்று நினைக்கிறவர்கள் தினமும் ஒரு பீச் பழம் சாப்பிடுங்கள். இந்தப் பழம் குடலை சுத்தம் செய்கிறது. அதோடு பீச் பழத்தில் இருக்கும் போனோலிக் அமிலம் தொப்பையை கரைக்க உதவுகிறது.

ஸ்ட்ராபெர்ரி : ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இருக்கும் லெப்டின் மற்றும் அடிபோநிக்டின் என்ற ஹார்மோனை அதிகரிக்கிறது. இவை அதிகமாக சுரப்பதால் நம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துவதோடு கொழுப்பினை கரைக்க உதவுகிறது. அதோடு ஸ்ட்ராபெர்ரியில் உள்ள ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி என்சைம் உடல் எடையைக் குறைப்பதில் முக்கியப்பங்காற்றுகிறது.

எலுமிச்சை : எலுமிச்சை பழம் நம் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்துவோம். இதனை சாறாக குடிக்கலாம். வெறும் எலுமிச்சை சாறுடன் சர்க்கரை அல்லது உப்பு சேர்க்காமல், இஞ்சி சேர்த்து கொதிக்க வைத்த நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிடலாம். எலுமிச்சையில் இருக்கும் விட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் கொழுப்பை கரைக்க உதவுகிறது. அதோடு உணவு செரிக்கவும் உதவுகிறது.

ஆப்ரிகாட் : நம் வீடுகளில் இதனை அதிகமாக சாப்பிட்டிருக்க மாட்டோம் ஆனால் உடல் எடையைக் குறைப்பதில் இந்தப் பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்து இருக்கிறது இவை உடலில் சேரும் கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

மாதுளம் பழம் : மாதுளம் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றிடும். அதோடு உடலில் உள்ள கெட்ட கொழுப்பினையும் நீக்க உதவுகிறது. மாலையில் சிற்றுண்டியில் மாதுளம் பழம் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆரஞ்சு : ஆரஞ்சுப் பழத்தில் விட்டமின் சி அதிகம் உள்ளது. இவை நம் உடலில் கொலாஜன் உற்பத்திக்கு உதவிடும். அதோடு இதிலிருக்கும் புரதச்சத்து நமக்கு தேவையான எனர்ஜியை கொடுக்கிறது. இதனால் கூடுதலாக உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு தோன்றாது. அதே போல இதில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளதால் அவை உடல் எடையை குறைக்கவும் உதவிடுகிறது.

வாழைப்பழம் : இதனை அதிகம் பழுக்க வைக்காமல் முக்கால் வாசி பழுத்த நிலையில் சாப்பிடுவது நல்லது. ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் அவை உங்களது பசியுணர்வை கட்டுப்படுத்திடும். அதோடு ஒரு நாளைக்கு தேவையான எனர்ஜியைக் கொடுத்திடும்.ஒரு நாளைக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டாலே போதுமானது.

திராட்சை : சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உடலில் உள்ள கொழுப்பை கரைப்பதில் திராட்சை சிறந்த பலனைத் தருகிறது என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். திராட்சையில் அதிகப்படியான கார்போஹைட்ரேட் இருக்கிறது. அதோடு சர்க்கரையும் இருப்பதால் இவை எனர்ஜியை தரக்கூடும். காலை உணவுடன் ஒரு கப் கிரேப்ஸ் எடுத்துக் கொள்ளலாம். இவை மற்ற உணவுகளையும் எளிதாக செரிக்கச் செய்திடும்.

அன்னாசிப்பழம் : உடல் எடையைக் குறைக்க அன்னாசிப் பழத்தையும் நீங்கள் தாரளமாக சாப்பிடலாம். அன்னாசிப் பழத்தில் அதிகப்படியான ஆண்ட்டிஆக்ஸிடண்ட் , மினரல்ஸ்,விட்டமின்ஸ் ஆகியவை நிறைந்திருக்கிறது. அன்னாசிப்பழத்தின் சிறப்பு… ‘ப்ரோமிலைன்’ என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. ‘ப்ரோமிலைன்’ உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிட வேண்டும்.23 1508751409 8

Related posts

உங்களுக்கு தெரியுமா ஏன் குளிர்காலத்தில் அவசியம் கமலா ஆரஞ்சு சாப்பிடணும் தெரியுமா?

nathan

அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…உடல் எடையை குறைக்க உதவும் கோடைக்கால பழங்கள்!!!

nathan

வாரம் ஒருமுறை இந்த அரிசியை சாப்பிடுங்கள்!! அப்படி என்ன ஸ்பெஷல்?

nathan

தெரிஞ்சிக்கங்க…நீரிழிவு நோயாளிகள் பச்சை ஆப்பிள் சாப்பிடலாமா?

nathan

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!

nathan

ஸ்டார் ஹோட்டல் முதல் தெருமுனை வரை கிடைக்கும் ஃப்ரைடு ரைஸ்… சாப்பிடலாமா… கூடாதா?!

nathan

4 வாரம் கொள்ளு சூப் சாப்பிடுங்க…சூப்பர் டிப்ஸ்..

nathan

உளுந்தங்கஞ்சி

nathan