28.5 C
Chennai
Sunday, May 18, 2025
foot care at home 3
அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்புகள் மறையவும் இந்த குறிப்புகளை பயன்படுத்தி பாருங்களேன்

முகத்திற்கு முக்கியத்துவம் தந்த நீங்கள் பாதங்களுக்கு தரவில்லையென்றால் உங்களை குறைத்து மதிப்படுவார்கள். உங்கள் பாதங்கள் மிருதுவாகவும், வெடிப்புகள் மறையவும் இந்த குறிப்புகளை பயன்படுத்திதான் பாருங்களேன்.

foot care at home 3
பீர்க்கங்காய் நார்

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

பாத நகங்களின் அழுக்கை அகற்ற

பாத நகங்களின் இடுக்குகளில் அழுக்குகள் எளிதில் போகாது. அவ்ரை பின் வைத்து எடுக்கக் கூடாது. அதற்கு பதிலாக தீக்குச்சியின் கைப்பிடிக்கும் பகுதியில் நல்லெண்ணெயால் நனைத்து தீபத்தில் சூடு செய்து நக இடுக்கில் உள்ள அழுக்களை எடுத்தால் எளிதில் வெளிவந்துவிடும். நகங்களும் பளபளக்கும்.

காபிப் பொடி

காபிப் பொடி சிறந்த கிளென்ஸர் ஆகும். அதனை கொண்டு வாரம் ஒருமுறை பாதங்களில் தேய்த்து கழுவினால் பாதம் சுருக்கமின்றி மிருதுவாகும்.

வெடிப்பு மறைய

விளக்கெண்ணெய் சிறந்த முறையில் பாதங்களில் உள்ள வறட்சியை போக்கும். விளக்கெண்ணெயை நன்றாக சூடு செய்து உடனே அதில் வெள்ளை மெழுகு வர்த்தியை உதிர்த்து, பொடி செய்து போட்டால் கரைந்து விடும். இந்த கலவையை வெதுவெதுப்பான பிறகு பாதத்தில் போட்டால் பாதம் மிருதுவாகும். வெடிப்பு காணாம் போய்விடும்.

கல் உப்பு

கல் உப்பை நல்லெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து கால்களில் குறிப்பாக குதிகால்களில் தேய்த்து கழுவுங்கள். இதனால் குதிகால் வெடிப்பு மறைந்து இறந்த செல்கள் அகன்று மென்மையாகும்.

Related posts

உங்க ராசிப்படி உங்களுக்கான அதிர்ஷ்ட எழுத்து எது தெரியுமா?

nathan

இப்படிப்பட்ட “பழங்களை” பயன்படுத்தினால் போதும், பொலிவோடும் இளமையோடும் கூடிய சருமத்தைப் பெறுவீர்கள்!

nathan

தொழில் தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை- தெரிந்துகொள்வோமா?

nathan

உங்களுக்கு தெரியுமா? முகப் பொலிவை அதிகரிக்கும் ட்ராகன்!

nathan

கணவரின் அஸ்தியை காத்திருந்து பெற்ற மீனா… வைரலாகும் போட்டோ!

nathan

மிருதுவான சருமத்திற்கு

nathan

இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆபத்தானவர்களாம்!

nathan

சுவையான தக்காளி ஆலிவ் சாலட்

nathan

சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்க வாரத்திற்கு ஒரு முறை இதைசெய்து வந்தாலே போதும்!…

sangika