25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Papaya face packs
ஆரோக்கிய உணவு

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது.

பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.
Papaya face packs

மருத்துவக் குணங்கள்

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும்.
எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.
தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.
பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.
பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி.
அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.
வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.
முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும்.
இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.
பப்பாளிப் பழத்தை தேனில் கலந்து சாப்பிட்டால் நரம்பு தளர்ச்சி குணமாகும்.
பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்

பப்பாளிப் பழத்தில் கரோட்டீன்கள் நிறைந்துள்ளது, இதனை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது சரும பிரச்சனையான Carotenemia-வை ஏற்படுத்துகிறது.
பப்பாளியில் Papain என்ற என்சைம் காணப்படுகிறது, இந்தியாவின் Purdue University நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் அதிகளவு Papain என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
பப்பாளி பழத்தில் விட்டமின் சி நிறைந்துள்ளது, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி ஆக்சிடன்டாக விட்டமின் சி திகழ்கிறது, எனினும் விட்டமின் சி-யை குழந்தைகள் ஒருநாளைக்கு 1200 மில்லிகிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்கள் 2000 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக கல் உருவாக்கத்தை தூண்டுகிறது.
அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.

வீட்டுத்தோட்ட வல்லுநர் கனகராஜ், “வீட்டுத்தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் தங்களது வீட்டுக்குத் தேவையான கீரை, காய்கறிகளை உள்ளடக்கிய 10 பைகளை மட்டும் முதலில் வைத்துப் பராமரிக்க வேண்டும். அதிலும் 22 நாள்களில் அறுவடைக்கு வரக்கூடிய கீரைகளை விதைக்க வேண்டும். கீரைகளில் தொடங்கிப் படிப்படியாகக் காய்கறிகள், பழச்செடிகள் என்று பயணித்துத் தொட்டிகளை அதிகப் படுத்தலாம். ‘முருங்கை முந்நூறு நோய்களைக் குணப்படுத்தும்’ என்பார்கள். ‘பப்பாளி இருக்கும் வீட்டில் நோயாளி இல்லை’ என்பார்கள். முருங்கை, பப்பாளி ஆகிய இரண்டுமே பல நோய்களைக் குணப்படுத்தக்க கூடியவை. ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் இரண்டு முருங்கைச் செடிகள், ஒரு ஜோடி பப்பாளி மரங்கள் இருந்தால் மருத்துவச் செலவு குறையும்” என்றார்.

Related posts

உங்களுக்கு தெரியுமா சின்ன வயசுல சாப்பிட்ட இந்த பழம் பித்த நீர், மூல பிரச்சனைகளை குணப்படுத்துகிறதாம்..!

nathan

உங்களுக்கு தெரியுமா ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சர்க்கரை வள்ளிக் கிழங்கின் அற்புத நன்மைகள்!!

nathan

நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள்!!

nathan

விக்கல் முதல் மனஅழுத்தம் வரை மருந்தாகும் ஏலக்காய்!

nathan

ருசியான முட்டை இடியாப்பம்

nathan

இரவில் தூங்குவதற்கு முன் பசித்தால் மீன் சாப்பிடலாமா?

nathan

சர்க்கரை அளவை உடனே குறைக்க இதைச் சாப்பிடுங்க!

nathan

சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா?தெரிந்துகொள்வோமா?

nathan

இதோ எளிய நிவாரணம்! மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் நார்ச்சத்து உணவுகள்

nathan