26.2 C
Chennai
Saturday, Dec 21, 2024
133302 thumb
ஆரோக்கிய உணவு

தைராய்டுக்கும் முட்டைகோஸுக்கும் என்ன சம்பந்தம்?

தைராய்டு. கழுத்துக்குக் கீழே பட்டாம்பூச்சிபோல காணப்படும் சுரப்பியைத்தான் `தைராய்டு’ என்கிறோம். வெறும் 30 கிராம் சுரப்பி என்றாலும், அது செய்யக்கூடிய வேலைகள் அதிகம். உடலின் பல பாகங்களை வழிநடத்தும் இந்த நாளமில்லாச் சுரப்பி, ஹார்மோன்களைச் சுரந்து, உடல் முழுக்க அனுப்பி எல்லாத் திசுக்களின் வளர்சிதை மாற்றத்துக்கும் உதவுகிறது. எனவே, தைராய்டில் ஒரு பிரச்னை என்றால், அது உடல் முழுக்க பாதிப்பை ஏற்படுத்திவிடும்.

தைராய்டில், `ஹைப்போதைராய்டிசம்’ (Hypothyroidism) என்ற ஒரு நிலை உள்ளது. இது போதுமான அளவு ஹார்மோன்களைச் சுரக்காத நிலை. `ஹைப்பர்தைராய்டிசம்’ (Hyperthyroidism) என்பது தேவைக்கு அதிகமாக ஹார்மோன்களைச் சுரக்கும் நிலை. இரண்டுமே ஆபத்தானவைதான். தைராய்டு குறைந்தால், உடலும் மனமும் சோர்வடைதல், உடல் பருத்தல், முடி கொட்டுதல், குளிர் தாங்க முடியாமல் போவது, மலச்சிக்கல், ஒழுங்கற்ற மாதவிடாய், குரலில் மாற்றம், ஞாபக மறதி போன்ற குறைபாடுகள் எல்லாம் ஏற்படும்.

தைராய்டும் உணவும்

தைராய்டு ஹார்மோன்களின் தயாரிப்புக்குத் தேவையான அயோடின், உணவில் போதுமான அளவு இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். திட்டமிட்ட, தகுந்த இடைவேளையில் சத்தான எந்த உணவையும் சாப்பிடலாம். முக்கிய மாகக் காய்கறிகள், பழங்கள் சாப்பிடவேண்டியது அவசியம்.

தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அயோடினை உறிஞ்சவிடாமல் தடுக்கும் காலிஃப்ளவர், முட்டைகோஸ், டர்னிப், புரோக்கோலி போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளலாம். குளூட்டன் உணவு வகைகளான கோதுமை, பார்லியையும் குறைத்துக்கொள்ளவேண்டும். ஃபாஸ்ட்ஃபுட் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக்கிழங்கு போன்றவற்றில் சல்ஃபர் அதிகம் இருப்பதால், தைராய்டு சுரப்பிகள் அயோடினை உறிஞ்சுவதில் சிரமத்தைச் சந்திக்கும். ஆகவே, அவற்றைக் குறைத்துக்கொள்ளலாம். சோயா, தினை போன்றவையும் தைராய்டை வேலை செய்யவிடுவதில்லை. வெங்காயம், திராட்சை, ஆப்ரிகாட் போன்றவை தைராக்ஸின் ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்கும் என்பதால், குறைவாக உட்கொள்வது நல்லது. ஆல்கஹால், எனர்ஜி ட்ரிங்க் போன்றவையும் தைராய்டுக்காக உட்கொள்ளும் மருந்தை வேலை செய்யவிடாது.

நார்ச்சத்து கொண்ட காய், கனிகளையும் அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் ஆரோக்கியமான உணவு, தொடர்ச்சியான மருந்துகள், நல்ல உடற்பயிற்சி, ஓய்வு போதுமானவை. உங்களுக்கு வந்திருப்பது தைராய்டு குறைவான நிலையா, அதிகமான நிலையா என்பதை மருத்துவர்களிடம் ஆலோசித்த பிறகு உங்கள் உணவை முடிவுசெய்து கொள்ளலாம்.

முக்கியமான `மூன்று’!

மூன்று முக்கிய விஷயங்கள்தான் தைராய்டுக்கு அவசியமானவை.

* வேளாவேளைக்கு உட்கொள்ளும் மருந்துகள்.

* அயோடைஸ்டு உப்பு.

* மருந்து உட்கொண்ட அரை மணி நேர இடைவெளிக்குப் பிறகே எந்த உணவையும் சாப்பிட வேண்டும்.

குறைந்த தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை

* மீன், நட்ஸ், பச்சைக் காய்கறிகள், பழங்கள், முழுதானியங்கள், பால், பால் பொருள்கள், கல்பாசி.

குறைந்த தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

* சோயா பால், முட்டைகோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர், பிரெட், சிப்ஸ், சிக்கன், வெண்ணெய், பொரித்த உணவுகள், துரித உணவுகள், காபி மற்றும் ஆல்கஹால்.

அதிக தைராய்டு உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை

* மீன், ஆலிவ் ஆயில், நட்ஸ், ஆளிவிதை, இறைச்சி, முட்டை, காளான், பாதாம், பீன்ஸ், முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலிஃபிளவர்.

அதிக தைராய்டு உள்ளவர்கள் தவிர்க்கவேண்டியவை

* சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள், பிரெட் மற்றும் காபி.133302 thumb

Related posts

நீங்கள் அதிக அளவில் தக்காளி பயன்படுத்துபவரா? அப்ப இத படியுங்கள்…

nathan

ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் மட்டுமில்ல, ஒரு பீர் குடிச்சாலும் நல்லதாமா!!!

nathan

தெரிந்துகொள்வோமா? யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது? பப்பாளி சாப்பிடும் போது செய்யக் கூடாதவைகள் என்ன தெரியுமா?

nathan

காலை உணவாக 1-2 வாழைப்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

nathan

தினசரி பாலில் கொஞ்சம் பெருஞ்சீரகம் சேர்ப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

nathan

உண்மை என்ன ?உணவுப் பொருட்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா?

nathan

கொள்ளு ரசம்

nathan

கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

nathan

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan