25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
1501494272 7441
ஆரோக்கிய உணவு

ஆரோக்கியம் தரும் வெந்தய குழம்பு செய்ய…!

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – 4 தேக்கரண்டி
வரமிளகாய் – 4
மல்லி – 3 தேக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 8 பல்
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
கறிவேப்பிலை, உப்பு – தேவையான அளவு

செய்முறை:

வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வரமிளகாய், மல்லி, சீரகம் இவை மூன்றையும் வறுத்து அரைக்கவும். தேங்காயை தனியாக அரைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் 6 தேக்கரண்டி ஊற்றி காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்கவும். ஊற வைத்த வெந்தயத்தை வடிகட்டி வாணலியில் போட்டு வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் மிளகாய் விழுதினை போட்டு வதக்கவும். பிறகு அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும். புளியை கரைத்து ஊற்றி உப்பு சேர்க்கவும். அடுப்பை குறைத்து வைத்து கொதிக்கவிடவும். எண்ணெய் தெளிந்தது மேலே வந்தவுடன் இறக்கவும்.1501494272 7441

Related posts

தெரிஞ்சிக்கங்க… காலை உணவை ஏன் தவறாமல் சாப்பிட வேண்டும் என்று தெரியுமா…?

nathan

நீங்கள் அதிக பூண்டை உணவில் சேர்த்துக் கொள்பவரா ?அப்ப உடனே இத படிங்க…

nathan

அவசியம் படிக்க.. வல்லாரை கீரையின் மருத்துவ பயன்கள்

nathan

உங்களுக்கு தெரியுமா மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

nathan

விட்டமின் சி நிறைந்த இப்பழத்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

nathan

வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

nathan

இந்த ஒரு கிழங்கு போதும் சாகும் வரை உங்களை நோய் நெருங்காது ! தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

நீங்கள் நிறைய சாக்லேட் சாப்பிடுபவரா ??அப்போ கட்டாயம் இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா புற்றுநோய் செல்களை அழிக்கும் உணவுகள்

nathan