32.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
ஆரோக்கிய உணவு

சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சத்துமாவு, பாசிப்பருப்பை வைத்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சத்தான சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை
தேவையான பொருட்கள் :

எல்லாத் தானியங்களும் சேர்த்து அரைத்த சத்து மாவு – 1 கப்,
பாசிப்பருப்பு – அரை கப்,
சின்ன வெங்காயம் – கால் கப்,
பூண்டு – 4 பல்,
கொத்துமல்லித் தழை – சிறிதளவு,
தேங்காய் – 1 பத்தை,
மிளகு – 1 ஸ்பூன்,
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை :

* சின்ன வெங்காயம், தேங்காய், கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைக்கவும்.

* ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதனுடன், சத்துமாவையும் சேர்த்துக் கரைத்துக்கொள்ளவும்.

* கரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, தேங்காய், கொத்துமல்லி, மிளகு, சீரகத்தூள் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும்.

* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சிறிய அடைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.

* சத்தான சுவையான சத்துமாவு பாசிப்பருப்பு அடை ரெடி.

* அடைக்குத் தொட்டுக்கொள்ள, காரச்சட்னி அருமையாக இருக்கும்.

Related posts

ஆரோக்கிய நலன்களை அள்ளி வழங்கும் முருங்கைக் கீரை

nathan

நாம் நல்ல பழக்கம் என்று கடைப்பிடிக்கும் சிலவன உண்மையில் தீய பலனை தான் அளிக்கின்றன!!!வாரத்தில் ஒரு மு…

nathan

சத்துக்கள் நிறைந்த கேரட் கீர்

nathan

தெரிஞ்சிக்கங்க…பலருக்கு தெரியாத பேரிக்காயில் நிறைந்துள்ள நன்மைகள்!!!

nathan

சூப்பர் டிப்ஸ்! ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் வெண்டைக்காய்!!

nathan

சூப்பர் டிப்ஸ்! தினமும் 3 பேரீச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் கிடைக்கும் பலன்கள்….!!

nathan

வெண்பூசணிக்காய் ஜூஸின் நன்மைகள் – venpoosani juice benefits in tamil

nathan

பட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள்!

nathan

ஆரஞ்சு அதிகமாக சாப்பிடுவதால் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா?

nathan