1498300432 0766
ஆரோக்கிய உணவு

ரம்ஜான் ஸ்பெஷல் நோன்பு கஞ்சி செய்ய தெரியுமா…?

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – 100 கிராம்
பயத்தம் பருப்பு – 25 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கேரட் – 1
தக்காளி – 1
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பிரியாணி இலை – 1
கொத்தமல்லி – சிறிது
புதினா – சிறிது
தேங்காய் பால் – அரை கப்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கேரட், சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். அரிசியை நன்கு நீரில் ஊற வைத்து, கழுவிக் கொள்ள வேண்டும். மிக்சியில் சீரகம், வெந்தயத்தை போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 650 மில்லி லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பயத்தம் பருப்பு, அரிசியைப் போட்டு நன்கு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கேரட், புதினா, பிரியாணி இலை, அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விட்டு, தீயை குறைவில் வைத்து, குக்கரை மூடி 15 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும். கலவையானது நன்கு வெந்ததும், அதனை பருப்பு மத்து கொண்டு நன்கு மசித்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து காய்ந்ததும், எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, தேங்காய் பாலை ஊற்றி நன்கு நுரை வரும் வரை கொதிக்க விட்டு, அதை மசித்து வைத்துள்ள கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு இறக்கவும். சுவையான நோன்பு கஞ்சி தயார்.1498300432 0766

Related posts

6ம் எண்ணில் பிறத்தவர்களின் பொதுவான குணங்கள் -தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

பிரக்டோஸ் மற்றும் மார்பக கேன்சர் வர வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது. அதுவும் பால் அதிகமாக அருந்தும்போது ஏற்படும்.

nathan

தக்காளி சாப்பிடுவதால் இவ்வளவு ஆபத்தா?தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டு/சமையல் குறிப்புகள்

nathan

முட்டையை வேக வைக்காமல், பச்சையாகக் குடித்தால் உடலுக்கு நல்லதா?

nathan

நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறதா பீன்ஸ்….?

nathan

அவசியம் படிக்க.. கருமுட்டையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

ஆவாரம் பூ பொடி எப்படி சாப்பிடுவது?

nathan

தயிர் தரும் சுக வாழ்வு

nathan