23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
22a
ஆரோக்கிய உணவு

நீங்கள் சாப்பிடுவது பிளாஸ்டிக் முட்டையா?

அதிர்ச்சி

கலப்பட செய்திகள் நமக்குப் புதிதல்ல…பாலில் தண்ணீர், மிளகாய்த்தூளில் செங்கல், டீத்தூளில் மரத்தூள், மிளகில் பப்பாளி விதை என்ற கலப்படமெல்லாம் பழகிவிட்டது. இதெல்லாம் தவிர்க்க முடியாது என்ற அளவுக்கு மனநிலையும் நமக்கு வந்துவிட்டது. ஆனால், உணவில் கலப்படம் என்பதைத் தாண்டி ஒரு பொருளையே போலியாகத் தயாரித்து நம் தட்டுக்கு அனுப்பினால் எப்படி இருக்கும்?

‘சீனர்கள் முட்டையையே பிளாஸ்டிக்கில் தயார் செய்து இந்தியாவுக்குள் விற்கிறார்கள்’ என்ற வதந்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. சிலர் வீடியோவாகவும் அனுப்புகிறார்கள்.ஊட்டச்சத்து நிபுணர் வினிதா கிருஷ்ணனிடம் பிளாஸ்டிக் முட்டை வதந்தி பற்றி கேட்டோம்.

”தமிழ்நாட்டில் நாமக்கல் போன்ற இடங்களில் இருந்து பல மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் முட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாறு லாரிகளில் அனுப்பப்படும் முட்டைகள் பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்க 16 டிகிரி முதல் 18 டிகிரி தட்பவெப்ப நிலையில் உறைய வைத்து பாதுகாக்கப்படுகிறது.

சில நேரங்களில் எதிர்பாராமல் இந்த தட்பவெப்ப நிலை மாறிவிடும்போதும், கோழிகளுக்குக் கொடுக்கப்படும் அளவுக்கு அதிகமான தீவனம் காரணமாகவும் முட்டைகளின் தன்மை மாறுகிறது. இந்த மாற்றமே ரப்பர் தன்மையுடையது போல தோற்றமளிக்கிறது.

இதைத்தான் பிளாஸ்டிக்கில் தயார் செய்த செயற்கை முட்டை என்று அரைகுறையாகப் புரிந்துகொண்டு புரளியாகப் பரப்புகிறார்கள். உண்மையில் பிளாஸ்டிக் முட்டை என்று ஒன்று கிடையாது. அது மட்டும் அல்லாமல் இந்தியாவில் கோழி வளர்ப்பு மற்றும் முட்டை உற்பத்தி தேவையான அளவு உள்ளது. எனவே, சீனா போன்ற நாடுகளில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே இல்லை” என்கிறார் உறுதியான குரலில்.

கோழிப்பண்ணை உரிமையாளரும் சமூக ஆர்வலருமான செங்கோட்டையனிடம் இதுபற்றிப் பேசினோம்.”பிளாஸ்டிக் முட்டை என்பது தவறான தகவல். இதில் எந்த உண்மையும் இல்லை. ஏனெனில், ஒரு முட்டையின் விலை சராசரியாக ரூ.3 ரூபாய் 50 பைசா அல்லது 4 ரூபாய். இந்த 4 ரூபாய் விலையில் ஒரு பிளாஸ்டிக் முட்டையை தயார் செய்ய முடியாது.

இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்கிறேன். ஒரு கோழி முட்டையின் எடை சராசரியாக 156 கிராம் இருக்கும். ஒரு கிலோ பிளாஸ்டிக்கில் அதே எடை அளவில் 6 அல்லது 7 முட்டைகள் தயாரிக்க முடியும். தரம் குறைந்த பிளாஸ்டிக் என்றால் ரூபாய் 30-லிருந்து 45 ரூபாய் கொடுத்து ஒரு கிலோ வாங்கலாம். தரமான பிளாஸ்டிக் 50 முதல் ரூபாய் 60 வரை விற்கப்படுகிறது.

இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கிய பிளாஸ்டிக்கில் 7 முட்டைகள் செய்து விற்றாலும் மொத்தமாக 28 ரூபாய்தான் சம்பாதிக்க முடியும். இதனால், முதலீடு செய்த ஒருவருக்கு எந்த லாபமும் கிடையாது.இதை எல்லாம் வைத்து பார்க்கும்போது, பிளாஸ்டிக் முட்டை என்பதற்கு சாத்தியமே இல்லை.அப்படியே ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் தரமான முட்டைகளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். உண்மையான கோழி முட்டை தண்ணீரில் முழுமையாக மூழ்காது.

அதனுடைய கூர்மையான பக்கம் மேலே தூக்கியவாறுதான் காணப்படும். இதற்கு நேர்மாறாக, பிளாஸ்டிக்கால் தயார் செய்யப்படுகிற பொருட்கள் தண்ணீரில் போட்டவுடன் மூழ்கிவிடும். காலி குடம், காலி குவளைதான் தண்ணீரில் மிதக்குமே தவிர தண்ணீர் நிரம்பிய குவளை தண்ணீரில் மிதப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். அதேபோல உண்மையான கோழி முட்டையின் மேலே நீர் கோடுகள், ரத்த நாளங்கள் வெளியே தெரியும்.

இதுதவிர இன்னொரு வழியும் இருக்கிறது. முட்டையை வேக வைத்த பின்னர் உரிக்கும்போது மெல்லிய வெள்ளைத்தோல் முதலில் வரும். காற்று குமிழ்கள் வெளிப்படும். முட்டையின் கீழ் பகுதியில் சிறு பள்ளம் போன்றும் காணப்படும். பிளாஸ்டிக் போன்ற பொருட்களால் தயார் செய்யப்பட்டால் முட்டையில் இந்த வெள்ளைத் தோல், குமிழ்கள், சிறுபள்ளம் எல்லாம் வராது. அதனால், இந்த பிளாஸ்டிக் முட்டை வதந்தியை மக்கள் நம்ப வேண்டாம்” என்கிறார்.22a

Related posts

எந்த நேரத்தில் பால் பருகலாம்?

nathan

பனங்கிழங்கை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

பாலுடன் வெல்லத்தை கலந்து தினமும் குடிங்க? அப்புறம் தெரியும் மாற்றம்

nathan

நீண்ட ஆயுளுக்கு இதுதான் காரணம்… நீங்களும் இதை சாப்பிடுங்க நோய் இல்லாமல் வாழலாம் சூப்பர் டிப்ஸ்..!!

nathan

ஆண்மை குறைபாட்டை போக்கும் செவ்வாழை

nathan

தெரிஞ்சிக்கங்க…சூடான தண்ணீரில் உப்பு கலந்து குளிப்பதால் இத்தனை நன்மைகளா?

nathan

இந்த மூன்று உணவுகளை பிரிட்ஜில் மட்டும் வைக்காதிங்க..

nathan

உங்களுக்கு சப்போட்டாப் பழத்தில் நிறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று தெரியுமா? அப்ப இத படிங்க!

nathan

மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது முட்டை!

nathan