31.9 C
Chennai
Monday, May 19, 2025
20 1484908301 crack
கால்கள் பராமரிப்பு

விரைவில் பாத வெடிப்பை மறையச் செய்யும் தேன் க்ரீம் !! எப்படி செய்வது என தெரியுமா?

பாதவெடிப்பு அதிக வலியை கொடுக்கும். சூப்பரான உருவத்தையும் சுமாராக காண்பிக்கும். அதோடு ஆரோக்கியமற்றதும் கூட.
என்ன செய்தாலும் திரும்ப வருகிறதே என கவலையாக இருக்கிறதா? நீங்கள் கேள்விப்படாத இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்களேன்.
இதோ உங்களுக்கான எளிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முயன்று பாருங்கள்.

பாத வெடிப்புகளுக்கான தேன் க்ரீம்
தேவையானவை :
தேன் – 1 கப்
பால் – 1 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு – 2 ஸ்பூன்

பாத வெடிப்புகளுக்கான தேன் க்ரீம்
தேனை லேசாக சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் பால் மற்றும் ஆரஞ்சு சாறை கலக்கவும். பாதம் மியக்வும் கடினமாக இருந்தால் ஆரஞ்சு சாறை அதிகபப்டுத்திக் கொள்ளவும்.
பின்னர் இதனை தினமும் இரவில் பாதங்களில் பூசிக் கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெடிப்பு மறைந்து மென்மையான பாதம் கிடைக்கும்.

பயிற்றம் மாவு- வேப்பிலை கலவை :
தேவையானவை :
எலுமிச்சை சாறு
பயித்தம் பருப்பு மாவு
வேப்பிலை
மஞ்சள்

பயிற்றம் மாவு- வேப்பிலை கலவை :
வேப்பிலையை அரைத்து அதனுடம் பயித்தப் பருப்பு பொடி, மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை கலந்து தினமும் பாதங்களில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். தொடர்ந்து செய்தால் சுருக்கங்களின்றி , வெடிப்பு மறைந்து பாதம் பளபளக்கும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :
கால் பக்கெட் வெதுவெதுப்பான நீரில் 2 கப் ஆப்பிள் சைடர் வினிகரை கலந்து அதில் கால்களை அமிழுத்துங்கள். இதிலுள்ள அமிலத்தன்மை பாதத்திலுள்ள கடினத்தன்மையை அகற்றி மென்மையாக்கிவிடும். வெடிப்பும் வேகமாக மறைந்து விடும்20 1484908301 crack

Related posts

உங்க கை மற்றும் கால் கருப்பா இருக்கா? அத வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்

nathan

பாதங்கள் மிருதுவாக்கி பளிச்சிட செய்ய…..

sangika

நகங்கள் அழகானால், உங்கள் கால் விரல்களும் அழகாகும்!…

sangika

பாத அழற்சியை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…

nathan

பாத வெடிப்பை போக்கும் இயற்கை வைத்தியம்

nathan

குதிகால் வெடிப்பு எதனால் வருகிறது

nathan

பாத பராமரிப்புக்கு உப்பு எவ்வாறு உதவுகிறது தெரியுமா?

sangika

சேற்றுப் புண் வந்தால் உடனடியாக கவனிக்க வேண்டியது என்ன?சூப்பர் டிப்ஸ்

nathan

செருப்பின் அச்சு உங்கள் பாதங்களில் தெரிகிறதா? இதை செய்து பாருங்க!!

nathan