26.6 C
Chennai
Sunday, Nov 17, 2024
1482401816 5827
சைவம்

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…

தேவையானவை:

கத்திரிக்காய் – 6
தனியா – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

பொடி செய்ய:

கத்திரிக்காயை நீளவாட்டில் கட் செய்து தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி… மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பை வறுக்கவும். ஆறியதும்… தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுக்கவும். கத்திரிக்காயை எடுத்து அதில் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து கிளறவும். வெந்து வரும் போது அரைத்து வைத்திருக்கும் மிளகாய், கடலைப்பருப்பு, தனியா பொடியைத் தூவி கிளறவும். சுவையான பொடி தூவிய கத்தரிக்காய் பொரியல் தயார்.1482401816 5827

Related posts

காலிபிளவர் பொரியல்

nathan

கீரை கூட்டு

nathan

கேப்ஸிகம் கிரேவி செய்ய வேண்டுமா….

nathan

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

nathan

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு

nathan

டொமேட்டோ சால்னா

nathan

தயிர் சாதம் பிராமண சமையல்

nathan

மஷ்ரூம் ராஜ்மா குருமா

nathan

பன்னீர் பட்டாணி மசாலா

nathan