30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சைவம்

சூப்பரான கடுகு சாதம் செய்வது எப்படி

உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்தும் சக்தி கடுகுக்கு உண்டு. இன்று கடுகை வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சூப்பரான கடுகு சாதம் செய்வது எப்படி
தேவையான பொருட்கள் :

உதிரியாக வேகவைத்த சாதம் – ஒரு கப்,
கடுகு – அரை டீஸ்பூன்,
கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு, மஞ்சள்தூள் – தேவையான அளவு,
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

பொடி செய்ய :

தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
புளி – சிறிதளவு,
காய்ந்த மிளகாய்,
பச்சை மிளகாய் – தலா ஒன்று,
பெருங்காயத்தூள்,
வெல்லம் – தலா கால் டீஸ்பூன்.

செய்முறை :

* பொடி செய்யக் கொடுத்துள்ள பொருள்களை மிக்ஸியில் சேர்த்து (வறுக்க வேண்டாம்) கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி… வேகவைத்த சாதம், அரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கி பரிமாறவும்.

* சூப்பரான கடுகு சாதம் ரெடி.

Related posts

அமாவாசை வெள்ளை பூசணி சாம்பார்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சாமை அரிசி புலாவ்

nathan

முருங்கைக்கீரை பொரிச்சகுழம்பு செய்ய…!

nathan

தவா மஸ்ரூம் ரெசிபி

nathan

கத்தரிக்காய் பொரியல் கறி

nathan

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

nathan

சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டு

nathan

சூப்பரான கத்தரி வெந்தயக்கறி

nathan

சிம்பிளான… கோவைக்காய் ப்ரை

nathan