31.7 C
Chennai
Friday, Aug 28, 2026
சைவம்

பொடி தூவிய கத்திரிக்காய் பொரியல் செய்வது எப்படி…

தேவையானவை:

கத்திரிக்காய் – 6
தனியா – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 2
தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

பொடி செய்ய:

கத்திரிக்காயை நீளவாட்டில் கட் செய்து தண்ணீரில் போடவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி… மிளகாய் வற்றல், தனியா, கடலைப்பருப்பை வறுக்கவும். ஆறியதும்… தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும்.

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை வறுக்கவும். கத்திரிக்காயை எடுத்து அதில் போடவும். உப்பு சேர்த்துக் கலந்து கிளறவும். வெந்து வரும் போது அரைத்து வைத்திருக்கும் மிளகாய், கடலைப்பருப்பு, தனியா பொடியைத் தூவி கிளறவும். சுவையான பொடி தூவிய கத்தரிக்காய் பொரியல் தயார்.

Related posts

தால் பாதாம் பிர்னி

nathan

பீன்ஸ் பருப்பு மசியல் சமையல் குறிப்பு – Beans Paruppu masiyal Samayal kurippu

nathan

வெங்காயத்தாள் கூட்டு செய்வது எவ்வாறு என்பதனை பார்ப்போம்!!

nathan

சிம்பிளான… உருளைக்கிழங்கு ரோஸ்ட்

nathan

சைனீஸ் ஃபிரைடு ரைஸ்

nathan

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோவக்காய் சப்ஜி

nathan

இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்

nathan

பேச்சுலர்களுக்கான… பீட்ரூட் பொரியல்

nathan

ஸ்நாக்ஸ் சோயா 65

nathan