சைவம்

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

சப்பாத்திக்கு கிரேவி என்று செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக காளான், குடைமிளகாயை வைத்து ஒரு சைடு டிஷ் தயாரித்து சாப்பிடுங்கள்.

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்
தேவையான பொருட்கள் :

மஸ்ரூம்/காளான் – 1 கப்
குடமிளகாய் – 1/4 கப்
பெரிய வெங்காயம் – 1/4
தக்காளி – 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை :

* காளானை சுத்தம் செய்து பெரிய துண்டுகளான நறுக்கி வைத்து கொள்ளவும்.

* குடமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

* தவாவை அடுப்பில் வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, சீரகத்தைப் போட்டு தாளித்த பின், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

* இஞ்சி பூண்டு பேஸ்ட் பச்சை வாசனை போனவுடன் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனைப் போக நன்கு வதக்க வேண்டும்.

* பின்பு அதில் தேவையான அளவு உப்பு தூவி பிரட்டி, காளானை சேர்த்து 8 நிமிடம் நன்கு கிளறி விட்டு, காளான் மசாலாவை நன்கு உறிஞ்சும் படி வேக வைக்க வேண்டும்.

* பிறகு குடமிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

* கடைசியாக மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லி தூவி பிரட்டி இறக்கினால், தவா மஸ்ரூம் ரெடி!!!201612311025347075 tawa mushroom SECVPF

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button