காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்றைய காலகட்டத்தில் ஓட்ஸ் கேரட் ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
சத்தான சுவையான ஓட்ஸ் – கேரட் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள் :
ஓட்ஸ் – 1 கப்
கோதுமை ரவை – 1/4 கப்
கடலைமாவு – 1/4 கப்
மோர் – 2 கப் (கரைப்பதற்கு தேவையான அளவு)
வெங்காயம் – 1
கேரட் – 1
முட்டைகோஸ் – சிறிய துண்டு
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரி பருப்பு(பொடித்தது) – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எண்ணெண்ய் – சுடுவதற்கு
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
செய்முறை :
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கேரட், கோஸை துருவிக்கொள்ளவும்.
* ஓட்ஸையும், கோதுமை ரவையையும் வெறும் கடாயில் சிறிது வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் பொடிக்கவும்.
* கடலை மாவையும் பச்சை வாசனை போகும்வரை வறுத்து கொள்ளவும்.
* மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் வறுத்த மாவுடன் உப்பு போட்டு மோர் விட்டு கரைக்கவும்.
* அதில் பொடித்த மிளகு, சீரகம், முந்திரிபருப்பு, கேரட், முட்டைகோஸ் சேர்த்து ஊத்தப்பம் பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தடிமனாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெண் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்
* சத்தான ஓட்ஸ் – கேரட் ஊத்தப்பம் ரெடி.
* இதை தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.